இந்தியாவில் உற்பத்தியை நிறுத்தியது 'சுசுகி'.. ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் இனி வராது? சீனாவால் சிக்கல்!
டெல்லி: ஆட்டோமொபைல் உற்பத்தி துறையில் மூலப்பொருளாக இருக்கும், மண்ணில் இருந்து தோண்டி எடுக்கப்படும் 'அரிய வகை காந்தங்களை' சீனா ஏற்றுமதி செய்வதை நிறுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில், சுசுகி நிறுவனம் 'ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்' கார் தயாரிப்பை நிறுத்தி வைத்திருக்கிறது. சீனாவின் பிடிவாதம் தொடர்ந்தால், ஃபோர்டு, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் மற்றும் நிசான் போன்ற மற்ற நிறுவனங்களும் பாதிக்கப்படும்.
'motoroctane' எனும் செய்தி ஊடகம், சுசுகி நிறுவனம் 'ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்' கார் தயாரிப்பதை நிறுத்தியுள்ளதாக தெரிவித்திருக்கிறது. இனி வரும் நாட்களில் இந்திய ஆட்டோமொபைல் துறை, சீனாவின் நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறது.

அரிய காந்தங்களில் சமேரியம், காடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், லுடீடியம், ஸ்காண்டியம் மற்றும் யட்ரியம் ஆகிய தனிமங்கள் அடங்கியுள்ளன. இவை, ஏர் கண்டிஷனிங் மோட்டார்கள் மற்றும் வழக்கமான கார்களுக்கான ஸ்டார்டர் மோட்டார்கள் போன்ற உபகரணங்களுக்கும், மின்சார மோட்டார்கள் தயாரிப்பதற்கும் பயன்படுகின்றன. இந்த தனிமங்கள் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. கடந்த ஏப்.4ம் தேதி அரிய வகை காந்தங்களை ஏற்றுமதி செய்வதை சீனா நிறுத்தியதுதான் இப்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில், பல நாடுகளுக்கு சீனாதான அரிய காந்தங்களை ஏற்றுமதி செய்து வந்தது. சொல்லப்போனால், உலக நாடுகள் இந்த காந்தகளுக்கு, 90%க்கும் அதிகமாக சீனாவைத்தான் நம்பியிருந்தன. வெறும் ஆட்டோமொபைல் மட்டுமல்லாது வீட்டு உபகரணங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையிலும் இந்த காந்தத்தின் தேவை இருக்கிறது. ஆனால், இப்போது இந்த ஏற்றுமதியை நிறுத்தியுள்ளதால், உடனடியான பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் துறை, ஆட்டோமொபைல்தான்.
மேற்சொன்னதை போல சுசுகி தனது 'ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்' மேக்கிங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது. மற்ற நிறுவனங்கள் தயாரிப்பை குறைத்துள்ளன. குறிப்பாக மாருதி நிறுவனம் 'இ-விட்டாரா' எனும் காரின் தயாரிப்பை 26,500 இலிருந்து வெறும் 8,200 யூனிட்டுகளாக குறைத்திருக்கிறது. இன்ன பெரிய நிறுவனங்கள், தங்கள் தயாரிப்பை தள்ளிப்போட திட்டமிட்டிருக்கின்றன.
சரி காருக்குதான் இந்த நிலைமை எனில், பைக்குகளுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. டிவிஎஸ் மற்றும் பஜாஜ் போன்ற சில முன்னணி பைக் தயாரிப்பாளர்கள் தங்கள் அச்சத்தை ஏற்கெனவே வெளிப்படுத்தியுள்ளனர். நிலைமை இப்படியே தொடர்ந்தால், கடையை சாத்திவிட்டு போக வேண்டியதுதான் என்று கவலை தெரிவிதிருக்கின்றனர். இப்படி இந்தியாவின் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையும் மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கிறது.
அரிய காந்தங்களை உடனடியாக ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று இந்நிறுவனங்கள் வலியுறுத்த தொடங்கியுள்ளன. இந்தியா அரசு தரப்பிலும், சீனாவுடன் இது குறித்து பேசப்பட்டு வருகிறது. ஆனால், நிலைமை இன்னும் நமக்கு சாதகமாக வரவில்லை. சீனா அனுமதி கொடுக்கவில்லை. விரைவில் அனுமதி கொடுத்து இந்திய ஆட்டோமொபைல் துறையை காப்பாற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications