அருணாச்சல பிரதேச எல்லையில் சும்மா டெஸ்ட் செய்து பார்த்ததா சீனா? அப்ப ஸ்கெட்ச் வேற இடத்துக்கா?
டெல்லி: அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா ஊடுருவ முயற்சித்ததே இந்திய ராணுவத்தினர் உஷார் நிலையில் இருக்கின்றனரா? என்பதை சோதித்து பார்க்கத்தான் என்கின்றனர் பாதுகாப்பு துறை வல்லுநர்கள். சீனா இந்த ஊடுருவலை விட மிகப் பெரிய சதித்திட்டத்தை நிறைவேற்ற காத்திருக்கிறது எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா ஊடுருவல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையில், 9-ம் தேதியன்று, சீனாவின் பிஎல்ஏ துருப்புக்கள் தவாங் பிரிவின் யாங்ட்சே பகுதியில் உள்ள எல்லைக் கோட்டை மீறி, தன்னிச்சையாக தற்போதைய நிலையை மாற்ற முயன்றனர். சீன முயற்சியை நமது துருப்புக்கள் மிக உறுதியான முறையில் எதிர்கொண்டன. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் மற்றும் கைகலப்பில், பிஎல்ஏ நமது எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை இந்திய ராணுவம் துணிச்சலாகத் தடுத்தது. இதனால் அவர்கள் தங்கள் நிலைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டது. நமது தரப்பில் உயிரிழப்புகளோ, கடுமையான காயமோ ஏற்படவில்லை என்பதை இந்தச் சபையுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்திய ராணுவத் தளபதிகளின் சரியான நேரத் தலையீடு காரணமாக, பிஎல்ஏ வீரர்கள் தங்கள் நிலைகளுக்குத் திரும்பிச் சென்றனர். சம்பவத்தின் தொடர்ச்சியாக, அப்பகுதியில் உள்ள நமது உள்ளூர் தளபதி 11ந்தேதி அன்று எதிர்த் தரப்பினருடன், நிறுவப்பட்ட வழிமுறைகளுக்கு இணங்க பிரச்சினையை விவாதிக்க ஒரு கூட்டத்தை நடத்தினார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் தவிர்த்து, எல்லையில் அமைதியையும், இணக்கமான சூழலையும் நிலைநாட்ட சீனத் தரப்புக் கேட்டுக் கொள்ளப்பட்டது. தூதரக வழிமுறைகள் மூலமும் சீனத் தரப்பிடமும் இந்தப் பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டது. நமது படைகள் நமது பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ளன என்றும், அதன் மீது மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் முறியடிக்கும் நடவடிக்கையைத் தொடரும் என்றும் நான் இந்த அவையில் உறுதியளிக்க விரும்புகிறேன். நமது ராணுவ வீரர்களின் துணிச்சலான முயற்சிக்கு உறுதுணையாக இந்த முழு அவையும் ஒன்றுபட்டு நிற்கும் என்று நான் நம்புகிறேன் என கூறியிருந்தார்.
அண்மையில்தான் சீனா அதிபர் ஜின்பிங்குடன் இந்தோனேசியாவின் பாலியில் ஜி20 மாநாட்டின் போது பிரதமர் மோடி கைகுலுக்கி நல்லுறவை வெளிப்படுத்தி இருந்தார். அந்த வெளிப்பாட்டின் ஈரம் காய்வதற்குள்ளாகவே சேட்டையை சீனா காண்பித்திருக்கிறது. பொதுவாக சீனாவின் இத்தகைய ஊடுருவல் முயற்சிகள், எல்லை பிராந்தியங்களில் தன்னிச்சையாக எடுக்கப்படக் கூடிய முடிவுகளாக இருப்பதும் இல்லை. சீன ராணுவ மேலிடத்தின் கட்டளைப்படியே ஊடுருவல்கள், சீண்டல் சம்பவங்கள், ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமானது.
இது தொடர்பாக ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் கூறுகையில், அண்டை நாடுகளின் எல்லையில் அந்த ராணுவத்தினர் உஷார் நிலையில் உள்ளனரா? இல்லையா? என்பதை சோதிக்க இத்தகைய நடவடிக்கைகளை சீனா மேற்கொள்வது வழக்கம். நமது ராணுவத்தினர் அதி உஷார்நிலையில் சீனாவின் ஊடுருவல் முயற்சியை முறியடித்துவிட்டனர். நாம் தொடர்ந்தும் உஷார் நிலையில்தான் இருக்க வேண்டும் என்பதைத்தான் சீனாவின் இந்த ஊடுருவல் பாடமாக சொல்லி இருக்கிறது என்கின்றனர்.
மத்திய அரசின் தரவுகளின்படியே லடாக் பிராந்தியத்தில் சுமார் 38,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை கடந்த 60 ஆண்டுகளில் சீனா ஆக்கிரமித்துவிட்டது. இந்தியா சீனா இடையேயான கிழக்கு எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் Yangtse என்பது முக்கியமான இடம். திபெத்தியர்கள் புனிதமானதாக போற்றுகிற 108 நீர்வீழ்ச்சிகள் இருக்கும் இடம். இந்த Yangtse போல இந்தியா சீனா இடையே லடாக், இமாச்சல பிரதேசம், சிக்கிம், உத்தரகாண்ட், அருணாச்சல பிரதேசம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 27 முக்கியமான இடங்கள் உள்ளன. கால்வன் பள்ளத்தாக்கும் இதில் அடங்கும். கிழக்கு எல்லையில் இந்தியா அண்மைக் காலமாக ஏராளமான கட்டமைப்பு பணிகளை செய்து கொண்டிருக்கிறது. இதனை சீனாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால்தான் கால்வன் பள்ளத்தாக்கில் ஆத்திரமூட்டும் நடவடிக்கையை சீனா மேற்கொண்டது எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆகையால் சீனா இப்போது அருணாச்சல பிரதேசத்தில் ஒரு சோதனை முயற்சியைத்தான் செய்து பார்க்கிறது.. ஆனால் ஏதோ ஒரு எல்லையில் மிகப் பெரிய நாசகார சதி வேலைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது சீனா என்பதும் பாதுகாப்பு வல்லுநர்களின் எச்சரிக்கையாக இருக்கிறது.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications