டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொடர் பொய்கள்.. இந்தியாவிற்கு எதிராக "அதே ஸ்டைல்" பிளான்.. எல்லையில் சீனாவின் புது பித்தலாட்டம்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லை பிரச்சனையில் சீனா தொடர்ந்து பொய்களை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. எல்லை பிரச்சனையில் முடிந்த அளவு உலக நாடுகளை சீனா திசை திருப்பி வருகிறது.

Recommended Video

    India - China மோதல் குறித்து கருத்து சொன்ன பாகிஸ்தான் | Oneindia Tamil

    இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பிரச்சனை எப்போது வேண்டுமானாலும் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்திய எல்லையில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. இந்தியாவின் கட்டுமான பணிகளை தடுக்கும் வகையில் சீனா படைகளை குவித்து வருகிறது.

    இதை தடுக்கும் வகையில் இந்தியாவும் அங்கு பதிலுக்கு படைகளை குவித்து வருகிறது. இதனால் இரண்டு நாட்டிற்கும் இடையில் போர் ஏற்பட போகிறதா என்று அச்சம் எழுந்துள்ளது.

    சென்னையில் இருந்து சேலத்திற்கு விமானத்தில் சென்ற 6 பேருக்கு கொரோனா.. பயணிகள் ஷாக்!சென்னையில் இருந்து சேலத்திற்கு விமானத்தில் சென்ற 6 பேருக்கு கொரோனா.. பயணிகள் ஷாக்!

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    ஆனால் இந்திய சீன எல்லையில்இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் நிலையில் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அங்கு பெரிய பிரச்சனை எதுவும் நடக்கவில்லை என்று கூறி வருகிறது. அதாவது, இந்திய சீனா எல்லையில் எல்லாம் சரியாக இருக்கிறது. எப்போதும் போலத்தான் சூழ்நிலை இருக்கிறது. நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. நாங்கள் எங்கும் அத்துமீறவில்லை என்று சீனா கூறியுள்ளது .

    வேறு சில தகவல்

    வேறு சில தகவல்

    அதேபோல் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஷாவோ லிஜியன் இதுகுறித்து கூறுகையில், இந்த எல்லை பிரச்சனையில் சீனா அமைதியை நிலைநாட்ட விளைகிறது. இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எல்லையில் இரண்டு நாடுகளுக்கும் பெரிய பிரச்சனை இல்லை. எப்போதும் போல பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். பேச்சுவார்த்தை மூலம் எந்த விதமான பிரச்சனை இருந்தாலும் அதை தீர்க்க தயாராக இருக்கிறோம், என்று கூறியுள்ளார்.

    எதிராக செயல்படுகிறது

    எதிராக செயல்படுகிறது

    சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு பக்கம் இப்படி அமைதி, சாந்தம் என்று பேசி வருகிறது. ஆனால் இன்னொரு பக்கம் இதற்கு அப்படியே எதிராக செயல்படுகிறது. நாங்கள் அமைதியை விரும்புகிறோம் என்று பொய்யை சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம் சீனா லடாக் எல்லையில் படைகளை அதிகரித்துள்ளது. அதாவது முன்பை விட இப்போது சீனா லடாக் எல்லையில் அதிக படைகளை குவித்து வருகிறது. அமைதி முக்கியம் என்று கூறிவிட்டு, சீன தொடர்ந்து படைகளை அதிகரித்து வருகிறது.

    அதிக படைகள்

    அதிக படைகள்

    அதன்படி சீனா இந்திய எல்லையில் மொத்தம் 4 பகுதிகளால் அதிகமாக படைகளை குவித்து வருகிறது. கல்வான் பகுதியில் முன்பு இருந்ததை விட கூடுதல் படைகள் களமிறக்கப்பட்டுள்ளது. அங்கு 3 இடங்களில் படைகள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் பாங்காங் திசோ பகுதியில் முன்பு இருந்ததை விட அதிகமாக சீனா தனது படைகளை குவிக்க தொடங்கி உள்ளது. இதுதான் அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    கட்டுமான பணிகள்

    கட்டுமான பணிகள்

    முக்கியமாக லடாக் எல்லையில் இந்தியா செய்யும் கட்டுமான பணிகளை தடுக்கும் வகையில்தான் சீனா இது போன்ற செயல்களை செய்து வருகிறது. கல்வான் பகுதியில் இந்தியா 255 கிமீ நீளத்தில் சாலை அமைத்து வருகிறது. அங்கு பாலம் அமைப்பதற்கான பணிகளை இந்தியா தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தற்போது இங்கு சீன படைகளை குவித்து உள்ளதால் பாலம் அமைக்கும் பணிகள் மொத்தமாக தடை பட்டு உள்ளது. இந்தியாவை முடக்கும் வகையில் சீனா இப்படி செய்து வருகிறது.

    சரியாக வாய்ப்பில்லை

    சரியாக வாய்ப்பில்லை

    அதேபோல் பாங்காங் திசோ பகுதிக்கு அருகே உள்ள இடத்தில் சீனா தொடர்ந்து ராணுவ படைத்தளத்தை விரிவாக்கும் பணிகளை செய்து வருகிறது. ஒரு பக்கம் அமைதி என்று கூறிவிட்டு சீனா இன்னொரு பக்கம் தனது படைகளை விரிவாக்கி வருகிறது. உலக நாடுகளிடம், முக்கியமாக அமெரிக்காவிடம் லடாக் எல்லையில் அமைதி நிலவுவது போல சீனா சித்தரிக்க முயல்கிறது. அந்த நாடுகளின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சீனா இப்படி செய்து வருகிறது.

    இந்தியா கவனம்

    இந்தியா கவனம்

    சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு பக்கம் இப்படி அமைதி, சாந்தம் என்று பேசி வருகிறது. ஆனால் இன்னொரு பக்கம் இதற்கு அப்படியே எதிராக செயல்படுகிறது. நாங்கள் அமைதியை விரும்புகிறோம் என்று பொய்யை சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம் சீனா லடாக் எல்லையில் படைகளை அதிகரித்துள்ளது. அதாவது முன்பை விட இப்போது சீனா லடாக் எல்லையில் அதிக படைகளை குவித்து வருகிறது. அமைதி முக்கியம் என்று கூறிவிட்டு, சீனா தொடர்ந்து படைகளை அதிகரித்து வருகிறது.

    அதே ஸ்டைல் அரசியல்

    அதே ஸ்டைல் அரசியல்

    சீனாவில் கொரோனா தாக்குதல் தொடங்கிய போதும் இதே போலத்தான் சீனா செயல்பட்டது. அதாவது கொரோனா காரணமாக பாதிப்பு இல்லை. இது ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவாது என்றெல்லாம் சீனா கூறி வந்தது. கொரோனாவின் தீவிரத்தை சீனா கொஞ்சம் மட்டுப்படுத்த பார்த்தது. அதேபோல் தற்போது எல்லையில் நடக்கும் பிரச்சனையின் தீவிரத்தையும் சீனா மறைக்க முயல்கிறது.

    English summary
    China still continuous is standoff in the Indian border even after saying its peace over there to world media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X