டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அருணாச்சல பிரதேசத்தில் காணாமல் போன 5 இந்தியர்களை ஒப்படைத்தது சீனா

Google Oneindia Tamil News

டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் காணாமல் போன 5 இந்தியர்களை ராணுவத்திடம் சீனா ஒப்படைத்தது. இந்த ஒப்படைப்பு சம்பவம் சீன பகுதியில் நடைபெற்றது.

அருணாச்சல பிரதேசத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இந்திய சீன எல்லையில் மேல் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்குச் சென்ற 5 இந்தியர்கள் வீடு திரும்பவில்லை. இவர்கள் அனைவரும் தகின் இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரையும் சீன ராணுவ வீரர்கள் கடத்திச் சென்றுவிட்டதாக வனத்திலிருந்து தப்பியவர்கள் தகவல் கொடுத்தனர்.

China to handover 5 Indians today

இதுதொடர்பாக இந்திய ராணுவத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து சீன ராணுவம் கூறுகையில் அருணாச்சல பிரதேசமும் எங்களது தெற்கு திபெத் என கூறியது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில் 5 இந்தியர்களும் தங்கள் வசம் இருப்பதாக சீன ராணுவம் தெரிவித்திருந்தது. மேலும் அவர்கள் 5 பேரையும் இன்று ஒப்படைப்பதாகவும் கூறியிருந்தது. அதன்படி அவர்களை சீன பகுதியில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தது. அவர்கள் இந்திய எல்லைக்கு வர இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். அதன் பின்னர் கிபிது எல்லை சோதனை சாவடி வழியாக அவர்கள் அருணாச்சல பிரதேசத்தில் நுழைவர்.

இந்த தகவலை இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில் இவர்கள் 5 பேரும் போர்ட்டர்கள், வழிகாட்டிகள் ஆவர். இவர்கள் காடுகளில் மூலிகை செடிகளை சேகரிக்க செல்வது வழக்கம். இது பாரம்பரிய மருத்துவத்திற்கு பயன்படுவதால் உலக சந்தையில் இந்த மூலிகைக்கு அதிக விலை கிடைக்கும் என்பதால் இந்த மூலிகையை சேகரிக்க சென்றிருக்கலாம் என தெரிகிறது.

Recommended Video

    China Hands Over 5 Indians | Arunachal Pradesh | Oneindia Tamil

    இதுகுறித்து தேஸ்பூரை சேர்ந்த பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கர்னல் ஹர்ஷவர்தன் பாண்டே கூறுகையில் 1000 கி.மீ. தொலைவில் உள்ள அன்ஜா மாவட்டத்தில் 5 பேரும் விடுவிக்கப்பட்டனர். ஒப்படைக்கும் நடைமுறைகளை முடித்துக் கொண்டு அவர்கள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    கொரோனா விதிகளின்படி மேற்கண்ட 5 பேரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர். அதன்பின்னர் அவர்கள் 5 பேரும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அருணாச்சல பிரதேசம் இயற்கையான பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றது. மருத்துவ மூலிகைகள் சேகரிக்க சாகசம் புரியும் மக்கள் விரும்புவார்கள். அது போல் வேட்டையாடுவதையும் விரும்புவார்கள்.

    எல்லைக் கோட்டு பகுதியில் ஏற்கெனவே நீடித்த நிலையே தொடர்கிறது.. பதற்றம் ஏதும் இல்லை எல்லைக் கோட்டு பகுதியில் ஏற்கெனவே நீடித்த நிலையே தொடர்கிறது.. பதற்றம் ஏதும் இல்லை

    அவ்வாறு வேட்டையாடும் போது அவர்கள் எல்லைக் கோட்டு பகுதிக்கு அந்த பக்கம் சென்றுவிட்டார்கள். தற்போது தொடர் முயற்சியால் சீன ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட 5 பேரும் விடுவிக்கப்பட்டனர் என்றார்.

    English summary
    China is going to handover 5 India Civilians today at Kibithu border area.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X