2029ல் பிரதமர் விஜய்தான்? வடஇந்தியாவில் திடீரென ட்ரெண்டாகும் விஜய்.. இன்ஸ்டாகிராமில் வைரல் ரீல்ஸ்
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று, அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது அவரது அரசியல் தாக்கம் தென்னக எல்லையைக் கடந்து வடஇந்தியாவிலும் பெரும் புயலைக் கிளப்பி வருகிறது. கடந்த சில தினங்களாக, வடஇந்திய சமூக வலைத்தளப் பக்கங்களில் "CM Vijay" என்ற ஹேஷ்டேக் திடீரென தேசிய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இன்ஸ்டாகிராம் வைரல் ரீல்களும் மாஸ் எடிட்களும்:
தமிழக அரசியலில் சுமார் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்தெறிந்து, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களின் பதவியேற்பு விழா மற்றும் சட்டமன்றப் பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. குறிப்பாக பீகார், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்கள் (Influencers) மற்றும் உள்ளூர் செய்திப் பக்கங்கள் (Local News IDs) விஜய்யின் மாஸான அரசியல் வருகையைக் கொண்டாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
விஜய்யின் பழைய திரைப்படங்களின் மாஸ் காட்சிகளையும், அவரது தற்போதைய நிஜ அரசியல் நகர்வுகளையும் ஒப்பிட்டு, பின்னணியில் அதிரடியான இந்திப் பாடல்களை இணைத்து உருவாக்கப்படும் ரீல்ஸ்கள் வடஇந்திய இளைஞர்கள் மத்தியில் லட்சக்கணக்கான லைக்குகளையும் வியூஸ்களையும் குவித்து வருகின்றன.
"இந்தியாவின் சிறந்த முதல்வர்" - வடமாநில மக்கள் ஆதரவு:
சமூக வலைத்தளங்களில் மட்டும் அல்லாமல், வடஇந்தியாவில் நடத்தப்படும் பொதுமக்களின் கருத்துக்கணிப்பு (Vox Pop) வீடியோக்களிலும் விஜய்க்கு ஆதரவாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வடமாநில இளைஞர்கள் பலரும், "பாரம்பரியமிக்க ஒரு மாநிலத்தின் இத்தனை ஆண்டுகால அரசியல் கட்டமைப்பை ஒரே தேர்தலில் உடைப்பது சாதாரண விஷயமல்ல. விஜய் ஒரு தூய்மையான, புதிய அரசியலை முன்னெடுத்துள்ளார்" எனப் பாராட்டிப் பேசுகின்றனர்.
மேலும் பல வடஇந்திய நெட்டிசன்கள், "இந்தியாவின் தற்போதைய சிறந்த முதல்வர் விஜய் தான்" என்றும், அவரது எளிமையும் துடிப்பான அணுகுமுறையும் தங்களைக் கவர்ந்துள்ளதாகவும் எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
2029 பிரதமர் வேட்பாளரா? கிளம்பும் புதிய விவாதம்:
இந்த ட்ரெண்டின் உச்சகட்டமாக, தற்போதே வடஇந்தியப் பக்கங்களில் "2029-ல் இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய்" என்ற புதிய விவாதமும் கிளம்பியுள்ளது. தென்னிந்தியத் தலைவர்கள் தேசிய அரசியலில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில், வடஇந்திய இளைஞர்களே தானாக முன்வந்து இத்தகைய போஸ்ட்களைப் பகிர்ந்து வருவது அரசியல் நோக்கர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சினிமாப் பிரபலம் என்ற எல்லையைத் தாண்டி, வடமாநிலங்களின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் மத்தியில் ஒரு மாஸ் லீடராக விஜய் பார்க்கப்படத் தொடங்கியுள்ளார். பிராந்திய மொழி எல்லைகளைக் கடந்து, வடஇந்தியாவின் இதயப்பகுதிகளில் தமிழக முதல்வர் விஜய் இவ்வாறு ட்ரெண்டாவது, இந்திய அரசியலில் தென்னகத் தலைவர்களுக்கான தேசிய அங்கீகாரம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதை உணர்த்துகிறது.
ஆனால் இந்த டிரெண்ட் எல்லாம் உண்மையில் நடப்பதா.. அல்லது narrative செட் செய்யப்படுகிறதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. திடீரென விஜய் இப்படி வடஇந்தியாவில் டிரெண்டாக என்ன காரணம் இருக்க முடியும்.. இதற்கு பின் இருப்பது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications