• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சீன இராணுவத்தின் ரகசிய பிரிவு '61398'.. இந்தியாவுக்கு எதிராக செய்து வரும் உளவு வேலை.. ஷாக் தகவல்

|

டெல்லி: இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி விவரங்களை சீன இராணுவத்தின் ரகசிய பிரிவு '61398' உளவு பார்த்து வருவதாக பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

  India- வுக்கு எதிராக உளவு பார்க்கும் china- வின் ரகசிய பிரிவு

  பாதுகாப்பு அமைப்புகளின் அறிக்கையின்படி, சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் (பி.எல்.ஏ) ரகசிய பிரிவு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

  கடந்த சில மாதங்களில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்துடன் தொடர்புடைய சீன ஹேக்கர்கள் சைபர் உளவு மூலம் நாட்டின் முக்கியமான தகவல்களை திருட முயன்றதாக பல வழக்குகள் பதிவாகியுள்ளன.

  ரபேலை வைத்து சீனாவை அதிர வைக்கலாம்.. மாஜி விமானப்படை அதிகாரி தரும் குட் நியூஸ்

  இந்தியாவுக்கு எதிராக

  இந்தியாவுக்கு எதிராக

  சீனாவின் ஷாங்காயில் உள்ள புடாங் மாவட்டத்தின் டாடோங் அவென்யூவை தலைமையிடமாகக் கொண்டு '61398' என்ற பிரிவு இயங்குகிறது. இந்த பிரிவு தான் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகளை உளவு பார்த்து வருவதாக பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன. மத்திய பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு அதிகாரி பிரபல ஆங்கில ஊடகத்திடம் இது தொடர்பாக பேசுகையில், "61398" உளவு பிரிவு மூலம், சீனா நீண்ட காலமாக உலகம் முழுவதும் இணையம், விண்வெளி மற்றும் புவி இருப்பிட நுண்ணறிவு போன்ற தகவல்களை திருடுவதில் ஈடுபட்டுள்ளது. இந்த உளவு பிரிவு இந்தியாவுக்கு எதிராக மிகவும் தீவிரமாக செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது, "என்று அந்த அதிகாரி கூறினார்.

  பல நிறுவனங்கள் உளவு

  பல நிறுவனங்கள் உளவு

  சீன ராணுவ 2015ம் ஆண்டு புதிதாக உருவாக்கிய தொழில நுட்ப ஆதரவு படை தான் '61398' . இந்த படையின் வேலை என்பது சைபர் மற்றும் மின்னணு போரை மையப்படுத்தியுள்ளது. சீனாவின் சைபர் உளவுப் பணிகளுக்கு 3 ஹாக்கர்கள் உதவுவதாக கூறப்படுகிறது. அண்மையில் இவர்கள் மால்வேர்கள் இணைந்த தனியான கம்ப்யூட்டர் புரோக்ராம்களை அனுப்பி பல அரசு மற்றும் தொழில்நிறுவனங்களை உளவு பார்த்த தாகவும் பாதுகாப்பு அதிகாரி கூறினார்.

  நிலைகுலை வைக்க முயற்சி

  நிலைகுலை வைக்க முயற்சி

  சமீபத்தில், இந்த ஹேக்கர்கள் சைபர் உளவுத்துறையில் மால்வேரை அனுப்பி உலகளவில் ஒரு சிறப்பு கணினி நிரலை அனுப்ப முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார்கள்

  சைபர் தாக்குதல் வாயிலாக எதிரி நாடுகளை சீனாவால் நிலைகுலையவைக்க முடியும் என்கிறார்கள்.

  உளவு பணி

  உளவு பணி

  2014 ஆம் ஆண்டில், அமெரிக்கா ஐந்து சீன இராணுவ அதிகாரிகளை உளவு பார்த்ததாக குற்றம் சாட்டியது, அவர்கள் '61398' பிரிவின் ஒரு பகுதியாக இருந்தனர். உலகெங்கிலும் இணைய உளவுப் பணியில் ஈடுபட்டுள்ள பி.எல்.ஏ இன் தீவிர ஆதரவுடன் யூனிட் '61398' போல , பல குழுக்கள் சீனாவில் உள்ளன என்று அமெரிக்க ஏஜென்சிகள் நம்புகின்றன.

  எதிரி நாடுகள் காலி

  எதிரி நாடுகள் காலி

  பல ஆய்வாளர்கள், போரின் போது முக்கியமான உள்கட்டமைப்பை வெற்றிகரமாக குறிவைக்கும் திறனை இப்போது சீனா கொண்டுள்ளது என்று நம்புகின்றனர். சைபர் தாக்குதல்கள் மூலம் சீன ஹேக்கர்கள் மின்சார கட்டம் மற்றும் வங்கி முறையை சீர்குலைக்கக்கூடும் என்ற கவலையை வெளிப்படுத்தினர்..

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Indian security agencies sounded that Chinese Army's secret '61398' unit spying on India's defense and research
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X