பாகிஸ்தான் மாநாட்டில் பேசிய மறுநாள், முன் அறிவிப்பின்றி இந்தியா வந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர்
டெல்லி: இந்தியா வந்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலை சந்திக்க இருக்கிறார்.
லடாக் எல்லைப்பகுதியில் இந்திய படையினருக்கும் சீனா ராணுவத்திற்கும் மோதல் ஏற்பட்டு 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் இ இன்று டெல்லி வந்துள்ளார்.
வாங் இ-யின் இந்திய பயணம் குறித்து சீன அரசு சார்பிலோ, இந்திய அரசு தரப்பிலோ எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

பாகிஸ்தான் மாநாட்டில் பேசிய வாங் இ
நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்புடன் சீனா இணைந்து செயல்படுவது குறித்த 2 வது அறிக்கை வெளியானது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இந்த கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய வாங் இ, காஷ்மீர் விவகாரத்தில் ஏராளமான இஸ்லாமிய நண்பர்களின் அழைப்புகளை கேட்டிருக்கிறோம்." எனக் கூறினார்.

வாங் இ கருத்துக்கு இந்தியா கண்டனம்
காஷ்மீர் தொடர்பான அவரது கருத்துக்களை இந்தியா உடனடியாக நிராகரித்ததுடன் தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் சீனா தலையிடக்கூடாது என்று கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அரிந்தம் பாக்சி, "நாடுகளும் அரசுகளும் இதுபோன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் தங்கள் நாட்டிற்கு ஏற்படும் அவப்பெயரை கருத்தில் கொள்ள வேண்டும்." என்றார்.

முன்னறிவிப்பின்றி இந்தியா வந்த வாங் இ
இந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வந்திருப்பது சர்வதேச கவனத்தை பெற்று உள்ளது. நேற்றைய தினம் கல்லூரி விழா ஒன்றில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், "கடந்த ஆண்டுகளில் சீனாவுடனான நமது உறவு இந்த அளவுக்கு மாறும் என யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

வாய்ப்புகளை அமைத்துத் தர முயற்சி
எதிர்காலத்தில் ஏராளமான வாய்ப்புகளை அமைத்துத் தர ராஜதந்திர அடிப்படையில் அரசு முயன்று வருகிறது. இது அரசு மீதான மிகப்பெரிய பொறுப்பு. இதன்மூலம் நமது பாதுகாப்புத் திறன் குறித்து சர்வதேச சமூகத்துக்கு புரிதலை தருவதுடன் இந்தியாவுக்கு ஆதரவை அதிகம் பெற்றுத்தரும். சீனாவை பொறுத்தவரை 2020-ல் இருநாட்டு ராணுவ மோதலுக்கு பிறகு இந்தியா - சீனா இடையிலான ராஜ தந்திர உறவுகள் அவர்களின் ராணுவ நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக உள்ளது என கருதுகிறார்கள். அதேபோல் சர்வதேச சமூகத்தின் ஆதரவும் புரிதலும் வெளிப்படையாக தெரிகிறது." என்றார்.

பிரிக்ஸ் மாநாட்டுக்கு அடித்தளம்
கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியா வந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ, இருநாட்டு எல்லைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவிட்டு சென்றார். ஆனால், அடுத்த 5 மாதங்களில் லடாக்கில் மோதல் ஏற்பட்டது. வாங் இ-யின் தற்போதைய இந்திய பயணம் அடுத்த பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டிற்கு அடித்தளம் இட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications