சிபில் ஸ்கோர் இல்லாம கடன் வாங்கலாம்.. ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு! யாருக்கெல்லாம் பொருந்தும்?
டெல்லி: கடன் விண்ணப்பங்களுக்கு குறைந்தபட்ச கிரெடிட் ஸ்கோர் தேவையில்லை என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. முதல்முறை கடன் பெறுபவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் எனவும் ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில் தெரிவித்திருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி ஊடகம் கூறியிருக்கிறது.
சமீப காலமாக கிரெடிட் ஸ்கோர்/சிபில் ஸ்கோர் என்பது பெரிய பிரச்சனையாக மாறியிருக்கிறது. நிதி விஷயத்தில் ஒழுக்கம் இல்லாதவர்களுக்கு கடன் எப்படி கொடுக்க முடியும் என வங்கிகள் கேட்கின்றன. ஆனால் கல்விக்கடனுக்கு கூட சிபில் ஸ்கோர் கேட்டால் எப்படி? முதல் முறை கடன் வாங்கும்போது சிபில் ஸ்கோர் இருக்காது, அப்படியெனில் கடன் கிடைக்காதே? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வந்திருக்கிறது.

கடந்த வாரம் மக்களவை மழைக்கால கூட்டத்தொடரின் போது, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ரிசர்வ் வங்கியின் இந்த நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுப்படுத்தியதாகவும், முதல்முறை கடன் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு சிபில் மதிப்பெண் குறைவாகவோ அல்லது பூஜ்ஜியமாகவோ இருந்தால், வங்கிகள் கடன் விண்ணப்பங்களை நிராகரிக்க கூடாது என்பதை அவர் சுட்டிக்காட்டினார் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்திருக்கிறது.
ஆனாலும், முதல்முறை கடன் பெறுபவர்களுக்கு சிபில் மதிப்பெண் கட்டாயமில்லை என்றாலும், வங்கிகள் தகுந்த விசாரணை மற்றும் பின்னணி சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நிதி அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இது, கடன் வரலாறு, முந்தைய திருப்பிச் செலுத்தும் முறை, தாமதமான தவணைகள், தீர்க்கப்பட்ட கடன்கள் உள்ளிட்டவற்றை சரிபார்ப்பதை உள்ளடக்கும்.
சவுத்ரி மேலும் கூறுகையில், "கடன் நிறுவனங்களுக்கான சிறந்த நடைமுறைகளின் ஒரு பகுதியாக, ரிசர்வ் வங்கி தனது 6.1.2025 தேதியிட்ட சுற்றறிக்கையில், முதல்முறை கடன் பெறுபவர்களின் விண்ணப்பங்களை, அவர்களுக்கு கடன் வரலாறு இல்லை என்ற ஒரே காரணத்திற்காக நிராகரிக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது."
கடன் வழங்கும் முடிவுகள் சந்தை சார்ந்த சூழலில் எடுக்கப்படுவதாகவும், வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின் அடிப்படையில் கடன் வழங்குநர்கள் தங்கள் வணிகக் காரணங்களை கருத்தில் கொள்கிறார்கள் என்றும் அவர் விளக்கினார்.
சிபில் மதிப்பெண் என்பது 300 முதல் 900 வரையிலான மூன்று இலக்க எண். இது ஒருவரின் 'கடன் தகுதியை' சுருக்கமாகக் கூறுகிறது. இந்த மதிப்பெண், கிரெடிட் இன்பர்மேஷன் பீரோ (இந்தியா) லிமிடெட் (CIBIL) மூலம் வழங்கப்படுகிறது. தனிநபர் கடன், தங்கக் கடன், வீட்டுக் கடன் போன்ற பல்வேறு வங்கி கடன்களுக்கு ஒருவரின் தகுதியை தீர்மானிக்க இது பயன்படுத்தப்படுகிறது.
கடன் தகவல் நிறுவனங்கள் தனிநபர்களுக்கு கடன் அறிக்கைகளை வழங்க ₹100 வரை கட்டணம் வசூலிக்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதைவிட அதிக தொகை வசூலிப்பது ஏற்கப்படாது. ரிசர்வ் வங்கியின் 2006 ஆம் ஆண்டு கடன் தகவல் நிறுவனங்கள் ஒழுங்குமுறையின்படி இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications