இனி ஒரு சிகரெட் விலை ரூ.72.. பிப்ரவரி 1ல் அமலுக்கு வரும் புதிய கலால் வரி.. மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயரும் என்று கணிக்கப்படுகிறது. குறிப்பாக ரூ.18க்கு விற்கப்படும் ஒரு சிகரெட் விலை, இனி ரூ.72க்கு விற்பனை செய்யப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய கலால் வரி திருத்த மசோதா விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நாட்டில் தற்போது 1,000 சிகரெட்களுக்கு அதன் வகை மற்றும் நீளத்தை அடிப்படையாக கொண்டு ரூ.200 முதல் ரூ.735 வரை வரி வசூலிக்கப்படுகிறது. இந்த புதிய சட்டத்திருத்தால், இனி ஆயிரம் சிகரெட்களுக்கு ரூ.2,050 முதல் ரூ.8,500 வரை வரிகள் விதிக்கப்படும்.

இதன் காரணமாக ரூ.18க்கு விற்பனை செய்யப்படும் ஒரு சிகரெட், இனி ரூ.72க்கு விற்பனை செய்யப்படும். அதுமட்டுமல்லாமல் மெல்லும் புகையிலைக்கான வரி 25 சதவிகிதத்தில் இருந்து 100 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட உள்ளது. ஹுக்கா புகையிலைக்கான வரி 25 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாக உயர்த்தப்பட உள்ளது. அதேபோல் புகையிலை பைப் சிகரெட்களுக்கான வரி 60ல் இருந்து 325 சதவிகிதமாக உயர்த்தப்பட உள்ளது.
இந்த வரி விதிப்பு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய நிதியமைச்சகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 10 கோடி வரை சிகரெட் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றனர். இந்த வரி விதிப்பு அதன் எண்ணிக்கை குறைக்கும் என்று கருதப்படுகிறது.
அதேபோல் தற்போதுள்ள 40 சதவிகித ஜிஎஸ்டி வரிக்கு கூடுதலாக இந்தக் கலால் வரி விதிக்கப்பட உள்ளது. இந்த வரிவிதிப்பில் 28 சதவிகித ஜிஎஸ்டி மற்றும் சிகரெட்டின் அளவைப் பொறுத்து கூடுதல் மதிப்பீட்டு வரியும் அடங்கும். இந்தியாவில் தற்போது சிகரெட் சில்லறை விலையில் சுமார் 53 சதவிகிதம் வரியாக மட்டுமே உள்ளது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் 75 சதவிகித இலக்கை விட இது குறைவு தான்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒரு தரப்பு சிகரெட் பிடிப்போர் அதன் விலைக்கு பயந்தே, கொஞ்சம் கொஞ்சமாக சிகரெட் மற்றும் புகையிலை பழக்கத்தை கைவிடுவார்கள் என்று கருத்து கூறி வருகின்றனர். மறுபுறம் இது கள்ளச்சந்தைக்கு வழிவகுக்கும் என்று விமர்சித்து வருகின்றனர்.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications