குட் நியூஸ்.. இந்தியாவில் 4ஆவது வேக்சினாக மாடர்னாவுக்கு அனுமதி.. விரைவில் இறக்குமதி என தகவல்
டெல்லி: இந்தியாவில் 4ஆவது வோக்சினாக மாடர்னா கொரோனா தடுப்பூசியை அவசரக் கால பயன்பாட்டுக்கு இறக்குமதி செய்ய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆம் அலை மெல்லக் குறைந்துள்ள நிலையில், வேக்சின் பணிகளை வேகப்படுத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி என மூன்று தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பற்றாக்குறை
இந்தியாவில் ஸ்புடனிக் வி உற்பத்தி முழு வீச்சில் தொடங்கப்படவில்லை. இதனால் கோவாக்சின், கோவிஷீல்டு வேக்சின்களை கொண்டே தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறுகிறது. இருப்பினும், நாட்டிலுள்ள 90 கோடிக்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதால் அந்த அளவுக்குத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு உற்பத்தி இல்லை. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வேக்சின் போடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சிப்லா விண்ணப்பம்
இதற்கிடையே பிரபல இந்திய மருந்து நிறுவனமான சிப்லா, அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் இறக்குமதி செய்து, பயன்படுத்த அனுமதி கோரி மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்திருந்தது. சிப்லா நிறுவனம் நேற்று விண்ணப்பித்திருந்த நிலையில், இன்று அந்த விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டது.
Recommended Video

மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி
இந்நிலையில், இந்தியாவில் மாடர்னா கொரோனா தடுப்பூசியை அவசரக் கால பயன்பாட்டுக்கு இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனத்திற்கு மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இத்தகவலை நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் உறுதி செய்துள்ளார். கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளைத் தொடர்ந்து, இந்தியாவில் அவசர கால அனுமதி பெறும் நான்காவது வேக்சின் மாடர்னா ஆகும். இதன் இறக்குமதி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாடர்னா தடுப்பூசி
மாடர்னா தடுப்பூசி RNA (mRNA) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 14 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்களாக அளிக்கப்படும் இந்த தடுப்பூசி கொரோனா வைரசுக்கு எதிராக 94.1% வரை பலன் அளிப்பது மூன்றாம் கட்ட மருத்துவ சோதனைகளில் தெரியவந்துள்ளது. உலகின் பணக்கார நாடுகளின் சாய்ஸாக பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளே உள்ளது. ஏற்கனவே பல நாடுகளும் இந்த வேக்சினுக்கு ஆர்டர் அளித்துள்ளதால், இந்தியாவில் மாடர்னா வேக்சின் இறக்குமதி சரியாக எப்போது தொடங்கும் என உறுதியாகத் தெரியவில்லை.
-
இலக்கியம் முதல் விண்வெளி வரை: டேராடூனில் களைகட்டும் டூன் இலக்கியத் திருவிழா 2026! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லை.. ஆனாலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சிக்கலில் மாட்டியுள்ளது ஏன்! -
போர்க்களத்தில் எதற்காக காண்டம்? ஒவ்வொரு வீரரின் பாக்கெட்டிலும் "இது" இருக்குமாம்.. செம சர்ப்ரைஸ் -
இந்தியாவை நம்ப வைத்து ஏமாற்றிய பிரான்ஸ்.. ரஃபேல் விமானங்கள் வேஸ்ட்! மொத்தமா போச்சு! -
மத்திய அரசின்.. ஆயுஷ்மான் பாரத் இன்சூரன்ஸ் கார்டு இருக்கா? குட்நியூஸ் வந்துடுச்சு! -
மோடியை கொல்ல சதி.. அலறிய அமெரிக்க CIA.. உடனே இந்தியாவுக்கு பறந்த மெசேஜ்.. 3 பேர் அதிரடியாக கைது -
Corona: முதல்வர் ஸ்டாலினே கொரோனாவால் போயிருப்பார்! ஆனால்..! எடப்பாடி பழனிசாமி சர்ச்சை பேச்சு! -
Corona: பரப்பன அக்ரஹார சிறையில் எனக்கு திட்டமிட்டு கொரோனா பரப்பினார்கள்! சசிகலா பகீர் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி












Click it and Unblock the Notifications