‛‛என்ட்ரியாகும் சிஐஎஸ்எப்’’.. நாடாளுமன்ற பாதுகாப்பில் பெரிய மாற்றம்.. வெளியேற்றப்பட்ட டெல்லி போலீஸ்
டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நுழைந்து 2 பேர் வண்ண புகை குண்டுகளை வீசிய நிலையில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. அதன்படி டெல்லி போலீசாரின் கட்டுப்பாட்டில் இருந்த நாடாளுமன்ற பாதுகாப்பு தற்போது பறிக்கப்பட்டு சிஐஎஸ்எப்- வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்தது. அப்போது லோக்சபாவின் பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் குதித்தனர். அவர்கள் மஞ்சள் நிற புகையை வெளியேற்றும் ஸ்பிரே மற்றும் கலர் புகை குண்டுகளை வீசினர்.

அதேபோல் நாடாளுமன்றத்தின் வளாகத்தில் பெண் உள்பட 2 பேர் இதேபோல் கலர் புகை குண்டுகளை வைத்து பீதியை ஏற்படுத்தினர். இதையடுத்து 4 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களுடன் தொடர்பு கொண்டவர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.
விசாரணையில் அவர்கள் சாகர் சர்மா மற்றும் கர்நாடகாவின் மைசூரை சேர்ந்த டி மனோ ரஞ்சன் (வயது 35), ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்த நீலம் (42) மற்றும் அமோல் ஷிண்டே (25) என்பது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக சூத்திரதாரியான லலித் ஜா உள்பட மேலும் 3 பேர் போலீசிடம் சிக்கினர். இதனால் தற்போது வரை மொத்தம் 7 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பின்னணி குறித்து டெல்லி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இனி எம்பிக்களை நெருங்க முடியாது! வரும் கண்ணாடி கவசம்.. நாடாளுமன்ற பாதுகாப்புக்கு புதுதிட்டம்.. அடடே
இதற்கிடையே தான் நாடாளுமன்றத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது தான் இந்த செயலுக்கு முக்கிய காரணம். இதுபற்றி லோக்சபா, ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் இரு சபைகளிலும் கோஷமிட்டனர். இதையடுத்து 142 எம்பிக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது விவாதத்தை கிளப்பி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் லோக்சபாவில் நுழைந்து ஸ்பிரே அடித்த சம்பவம் தான்.
இது ஒருபுறம் இருக்க நாடாளுமன்றத்தில் பாதுகாப்புகளை அதிகரிக்க மத்திய அரசு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் நாடாளுமன்ற பாதுகாப்பை மேற்கொள்ளும் பொறுப்பு டெல்லி போலீசாரிடம் இருந்து அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பொறுப்பு என்பது மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் வழங்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் நாடாளுமன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை டெல்லி போலீசாருக்கு பதில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மேற்கொள்ள உள்ளனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications