மாணவர்கள் போராட்டத்தின் அடையாளமாக உருவெடுக்கும் ஒரு போட்டோ.. உலக அளவில் வைரல்.. என்ன சிறப்பு?
Recommended Video
டெல்லி: டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
கடந்த வாரம் குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது சட்டமானது. இந்த சட்டத்திற்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு எதிராக நாடு முழுக்க பல மாநிலங்களில் மாபெரும் போராட்டம் எழுந்துள்ளது.இதற்கு எதிராக நேற்று
டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் நடந்த போராட்டத்தில் பெரிய கலவரமே ஏற்பட்டது. இதில் மாணவர்களை போலீசார் கடுமையாக தாக்கினார்கள்.

மாணவர்கள் போராட்டம்
நேற்று மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு எதிராக டெல்லியில் போலீஸ் தலைமையகம் முன் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஜேஎன்யூ மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தார்கள். மாணவர்கள் மட்டுமின்றி பல லட்சம் மக்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

என்ன செய்தனர்
இந்த போராட்டத்தில் மாணவர்கள் புரட்சிகரமான பாடல்களை பாடி போராட்டம் செய்தனர். விடுதலை குறிக்கும் விதத்தில் அவர்கள் நிறைய கோஷங்களை எழுப்பினார்கள். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக மாணவர்கள் கடுமையாக கோஷங்களை எழுப்பி, போராட்டம் நடத்தினார்கள்.
|
புகைப்படம்
இந்த நிலையில் டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. மாணவர்கள் மொத்தமாக ஒருவர் மீது ஒருவர் ஏறி நிற்கும் அந்த புகைப்படம்தான் பிரபலம் ஆகி உள்ளது. இதில் மாணவர்கள் தங்கள் கைகளில் காந்தி மற்றும் அம்பேத்கார் புகைப்படங்களை வைத்துள்ளனர்.

ஏன் இப்படி
அமைதியான போராட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆகியவற்றை நினைவு கூறும் வகையில் இந்த புகைப்படங்களை மாணவர்கள் கையில் ஏந்தி உள்ளனர். இந்த போட்டோதான் தற்போது இந்த மொத்த போராட்டத்தின் அடையாளமாக மாறியுள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டு ஊடகங்களிலும் இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications