இதுக்கு பேரு சவாலா? நாங்க ஏன் பாகிஸ்தானியருக்கு குடியுரிமை தரணும்.. மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி!
மதசார்பற்ற கொள்கையுடன், சகிப்புத்தன்மையுடன் மாணவர்கள் இருப்பது மனநிறைவை தருகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் எம்பி ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: மதசார்பற்ற கொள்கையுடன், சகிப்புத்தன்மையுடன் மாணவர்கள் இருப்பது மனநிறைவை தருகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் எம்பி ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக போராடி வருகிறது. இன்னொரு பக்கம் நாடு முழுக்க மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னையில் பல லட்சம் மாணவர்கள் போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த சட்ட திருத்தம் காரணமாக பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான சண்டை வந்துள்ளது. முக்கியமாக பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் இடையே வார்த்தை போர் முற்றியுள்ளது.

சொன்னார்
ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, நான் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை பார்த்து கேட்கிறேன். இந்த சட்டத்தை எதிர்த்து நீங்கள் போராடுவது இருக்கட்டும். உங்களுக்கு தைரியம் இருந்தால் பாகிஸ்தானியர்களை இந்திய குடிமகன் ஆக்குவோம் என்று வாக்குறுதி கொடுங்கள்.

மோடி சவால்
பாகிஸ்தானில் இருக்கும் நபர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுப்போம் என்று கூறுங்கள். அப்போது தெரியும் என்ன நடக்கும் என்று. உங்களுக்கு இந்திய மக்கள் அப்போது மிக சரியாக பதிலடி கொடுப்பார்கள். உங்களுக்கு மக்கள் சரியான பதிலை அன்று அளிப்பார்கள் என்று மோடி குறிப்பிட்டார்.
|
கேள்வி கேட்டார்
இந்த நிலையில் தற்போது இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் எம்பி ப. சிதம்பரம் பதில் அளித்துள்ளார். அதில், பாகிஸ்தானில் ஏற்கனவே குடிமகனாக இருக்கும் நபர்களுக்கு நாங்கள் ஏன் குடியுரிமை வழங்க வேண்டும்.? இது போன்ற சவால்களுக்கு என்ன அர்த்தம்?
|
சிதம்பரம் பதில்
மாணவர்களும், இளைய தலைமுறையும் தாராளவாத கொள்கையுடன், மதசார்பற்ற கொள்கையுடன் , சகிப்புத்தன்மையுடன், மனித தன்மையுடன் இருப்பது மன நிறைவை தருகிறது. இந்த அரசு இது போன்ற மாணவர்களின் கொள்கைகளை எதிர்க்கிறதா? என்று ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications