2வது முறையா மசோதா அனுப்பியாச்சு.. இப்போ ஆளுநர் என்ன செய்ய போகிறார்? "வெய்ட்டிங்!" - தலைமை நீதிபதி
டெல்லி: 2ஆவது முறையாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆளுநர் என்ன செய்ய போகிறார் என்பதை காண உச்சநீதிமன்றம் காத்திருப்பதாக தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் என தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் பொறுத்து பார்த்த தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கு மீது கடந்த 10 ஆம் தேதி விசாரணை நடத்தப்பட்டது. அந்த மனுவில் ஆளுநருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை தமிழக அரசு முன் வைத்தது. அப்போது நீதிபதிகள் மசோதாக்களை நிலுவையில் வைத்திருக்கக் கூடாது. 200 ஆவது சட்டப்பிரிவின் கீழ் ஒப்புதல் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் 13 ஆம் தேதியே ஆளுநர் ரவி 10 மசோதாக்களை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் இன்றைய தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதம் செய்த வழக்கறிஞர் , ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்திற்கு வந்து கொண்டிருக்க முடியாது. 8 கோடி மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை தங்களுக்கு உள்ளது. 15 மசோதாத்தள் நிலுவையில் உள்ளன.
மசோதாக்களை உரிய விளக்கமின்றி திருப்பி அனுப்பியுள்ளார். சட்டசபை மசோதா தவறு என கருதினாலும் அதை ஆளுநர் கிடப்பில் போட முடியாது என அரசு வழக்கறிஞர் வாதிட்டார். இதை கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில் ஆளுநர்களுக்கு சட்டசபை மசோதாக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் கிடையாது. குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்க முடியாது.
3 ஆண்டுகளாக மசோதாக்களை நிலுவையில் வைத்து கொண்டு என்ன செய்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி என நீதிபதி கேள்வி எழுப்பிய போது மத்திய அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர், 2020ஆம் ஆண்டு முதல் 180 மசோதாக்களில் 152 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டார் என்றார். இதையடுத்து சந்திரசூட் தொடர்கையில் மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்துக்கு வரும் வரை மாநில ஆளுநர்கள் ஒப்புதல் தராதது ஏன்?
தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 18ஆம் தேதி 2-வது முறையாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. இப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன செய்யப் போகிறார் என்பதை காண உச்சநீதிமன்றம் காத்திருக்கிறது என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications