ஸ்கூல் பொண்ணு என கூட பார்க்கலை.. கூட்டு பலாத்காரம் செய்த 5 மிருகங்கள்! 14 வயது சிறுமிக்கு கொடூரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேசிய தலைநகர் பகுதியில் அரங்கேறியுள்ள கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்த நவீன யுகத்திலும் கூட பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடந்தே வருகிறது. பெரும்பாலும் நன்கு தெரிந்தவர்கள் மூலமே இந்த சம்பவங்கள் நடக்கிறது.

இதை அவர்கள் வெளியே சொல்ல மாட்டார்கள் என்றே பல கொடூரன்களும் இதுபோன்ற அயோக்கியத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.

 குழந்தைகள்

குழந்தைகள்

குறிப்பாகச் சமீப காலமாக மைனர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கணிசமாகவே அதிகரித்து உள்ளன. சிறுமிகள் மீதான பலாத்கார நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இருப்பினும், எதற்கும் அஞ்சாமல் பெண்கள் துணிந்து புகார் கொடுக்க வேண்டும் என்றே சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர். புகார் அளிக்கும் பெண்களின் அடையாளம் வெளியே வராமல் இருக்கும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 டெல்லி

டெல்லி

குற்றங்களைத் தடுக்கவும் கூட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட இன்னும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே வருகிறது. அப்படியொரு கொடூரம் தான் டெல்லி குருகிராம் நடந்து உள்ளது. அங்கு ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து 10 ஆம் வகுப்பு மாணவியை அவரது நண்பர்கள் உட்பட 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

 புகார்

புகார்

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியின் தாயார் போலீசாரிடம் புகார் அளித்து உள்ளார். அதில் அவர், "சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு எனது மகள் வீட்டை விட்டு வெளியே சென்றார். அருகே இருக்கும் பூங்காவுக்கு அவர் வாங்கிங் சென்றதாகவே நாங்கள் நினைத்தோம். இருப்பினும், அவர் நீண்ட நேரமான பின்னரும் திரும்பி வரவில்லை என்பதால் அச்சமடைந்து தேட தொடங்கினோம்.

 திரும்பவில்லை

திரும்பவில்லை

அந்த பார்க் சென்று பார்த்த போதும், அவர் அங்கு இல்லை. இரவு முழுவதும் பல இடங்களில் தேடியும் எனது மகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் வீட்டின் அருகே அவர் இருப்பதைக் கண்டுபிடித்தோம். இரவு எங்குச் சென்றாய் என்ன ஆனது எனக் கேட்ட போது தான், அவர் அழுது கொண்டே என்ன நடந்தது எனச் சொன்னார்.

 என்ன நடந்தது

என்ன நடந்தது

எனது மகளை அவரது இரண்டு நண்பர்கள் பைக்கில் ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஹோட்டல் அறையில் வைத்து அவரை இரண்டு இளைஞர்கள் மற்றும் மூன்று பேர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறினார். மேலும், இதை வெளியே யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்" என்றார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 கைது

கைது

இதுவரை இந்தச் சம்பவம் தொடப்பாக இரண்டு பேரைக் கைது செய்து உள்ளனர். மற்ற மூன்று குற்றவாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட அந்த சிறுமி அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+