4ம் வகுப்பு பாஸான ராஜா.. பிரதமர் மோடியை சீண்டி சட்டசபையில் ‛குட்டிக்கதை’ கூறிய கெஜ்ரிவால்.. ஆஹா
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் 9 மணிநேரம் சிபிஐ விசாரித்த நிலையில் சிறப்பு சட்டசபை கூட்டம் நடந்தது. பிரதமர் மோடியின் படிப்பு குறித்த விவாதம் நடந்து வரும் நிலையில் அவர் 4ம் வகுப்பு பாஸ் செய்துவிட்டு அரசன் என அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டசபையில் குட்டிக்கதை கூறி விமர்சனம் செய்தது தேசிய அரசியலில் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்நிலையில் தான் ஆம்ஆத்மி கட்சியினர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை பாஜகவினர் எழுப்பி உள்ளனர்.
ஊழல் குற்றச்சாட்டு சுமர்த்தப்பட்ட டெல்லி சத்யேந்தர் ஜெயின் சிறையில் உள்ளார். அதேபோல் டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவும் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே டெல்லி மதுபான ஊழல் வழக்கில் நேற்று முன்தினம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் மொத்தம் 9 மணிநேரம் விசாரணை நடந்தது. இதன் தொடர்ச்சியாக அரவிந்த் கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று டெல்லி சட்டசபையின் ஒருநாள் சிறப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை, விவசாய சட்டங்களை ரத்து செய்த விவகாரத்தில் நடந்த போராட்டம், எதிர்க்கட்சிகளை குறிவைத்து பிரதமர் மோடி மற்றும் மத்திய பாஜக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் பிரதமர் மோடியின் கல்வி தகுதி குறித்தும் அவர் மறைமுகமாக பேசி பரபரப்பை கிளப்பினார்.

இதுதொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் குட்டிக்கதை ஒன்றை கூறி பேசினார். ‛‛இந்த கதை என்பது ஒரு பெரிய நாட்டின் அரசனாக உயர்ந்த சிறுவனை பற்றியது. ஆனால் அவர் கல்வியறிவு இல்லாதவர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டை முடக்கினார். இந்த அரசனின் கொள்கை என்பது முகமது பின் துக்ளக்கின் கொள்கைகள் போல இருந்தன. அதாவது தனது விருப்பத்துக்கு ஏற்ப முடிவுகளை மாற்றுவார்.
4ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அந்த அரசன்(ராஜா) அதன்பிறகு பள்ளியை விட்டு வெளியேறினார். ஆனாலும் அவரது இந்த செயல் போலியாக எம்ஏ பட்டம் பெறுவதை தடுக்கவேயில்லை. பட்டம் பெற்றது குறித்த விபரத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த 4ம் வகுப்பு பாஸ் செய்த அரசன் தனது நண்பர்களுடன் சேர்ந்து நாட்டை சூறையாடி வருகிறார்.
நாட்டில் உள்ள வங்கிகள் முதலில் சூறையாடப்பட்டன. நாடு வரலாறு காணாத வகையில் பணவீக்கத்தைக் எதிர்கொண்டது. பணவீக்கத்தால் மக்கள் கலக்கமடைந்தனர். இந்த அரசன் தன்னை எதிர்த்துப் பேசுபவர்களை சிறையில் தள்ளுவதோடு, அனைவரையும் சிறையில் அடைக்க தொடங்கி உள்ளார். மேலும் இளம் கட்சியான ஆம்ஆத்மியையும் நசுக்க முழு பலத்தையும் பயன்படுத்துகிறார்'' என பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்தாமல் கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும் கதையின் Moral என அவர் ஒன்றையும் கூறினார். அதாவது, ‛‛நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்கள் பாதிக்கப்பட்டால் படிப்பறிவில்லாத அரசனை அரியணையில் இருந்து நீக்குவது தான் மாரல் எனவும் அவர் தெரிவித்தார். இதன்மூலம் பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் மறைமுகமாக சட்டசபையில் கூறினார். இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக சட்டசபையில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
-
ஹார்முஸ் நீரிணை.. கட்டுப்பாட்டை கையில் எடுக்கும் US! டிரம்ப் போட்ட உத்தரவால் இந்தியாவுக்கு சிக்கல் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ்












Click it and Unblock the Notifications