Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேகவெடிப்பு எப்படி ஏற்படுகிறது.. வானிலையில் உடனடியாக என்ன நடக்கும்? சிக்கிமில் என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிக்கிம் மாநிலத்தில் உள்ள டீஸ்ட்டா ஆற்றுப்பகுதியில் திடீர் மேகவெடிப்பு ஏற்பட்டு வரலாறு காணாத மழை சில மணி நேரத்தில் பெய்தது. இந்த மழை வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமாகி உள்ளனர்.இந்நிலையில் பொதுவாக மேகவெடிப்பு எப்படி ஏற்படுகிறது. வானிலை மாற்றத்தின் போது என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் ஏரியில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது .இதனால் டீஸ்டா ஆற்றில் நீர் மட்டம் திடீரென அதிகரித்தது. அதிகப்படியான மழை காரணமாக சுங்தாங் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் வெள்ளத்தின் அளவு சட்டென 15-20 அடி உயரம் வரை கிடுகிடுவென அதிகரித்தது.இந்த வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

cloudburst in Sikkim : How do cloudbursts occur? what happens during climate change?

இந்நிலையில் திடீரென மேகவெடிப்பு எப்படி ஏற்படுகிறது. வானிலை மாற்றத்தின் போது என்ன நடக்கும் என்பதை அரசு பள்ளி ஆசிரியர் செல்வம் விளக்கி உள்ளார்.

தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: "மேக வெடிப்பு (Cloud Burst) ஒரு பகுதியில் நடைபெறும் குறுகியகால தீவிர மழைப்பொழிவு ஆகும். பொதுவாக நிலம் சூடாகும்போது நிலத்தில் இருக்கும் நீரும் சூடாகி விரிவடைந்து ஆவியாகும். இதனால் அந்த இடத்தில் அழுத்தம் குறையும். எடை குறைவாக இருப்பதால் நீராவி நிலத்தை விட்டு மேலே ஏறும்.

உயரம் ஏற ஏற வளிமண்டலத் தட்பவெப்பநிலை குறைந்து கொண்டே போகும். 15 கிமீ வரை உயரும் நீராவி குளிர்ந்து அங்கேயே மேகமாக மாறும் இப்படி சேரும் நீர்த்திவலைகள் சேர்ந்து எடை கூடும் நேரம் அந்த மேகங்களின் 'மேல் குளிர் காற்று வீசினால் மழையாகப் பொழியும், குறைந்த நேரத்தில் இந்த செயல்கள் எல்லாம் நடந்து வீரியம் கூடி பொழிந்தால் அது மேக வெடிப்பு என வரையறுக்கப்படுகிறது. சாதாரணமாக மேகம் உருவாகும் நேரத்தை விட குறைந்த நேரத்தில் மழைமேகம் உருவாகி 300 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவு மழையை ஒரே இடத்தில் கொட்டித் தீர்த்தால் அதுதான் மேக வெடிப்பு.

மேக வெடிப்புகள் பொதுவாக இடியுடன் கூடிய மழையுடன் தொடர்புடையது. மேலும் மழைப் புயலில் மேல்நோக்கிச் செல்லும் காற்று நீரோட்டங்கள் அதிக அளவு தண்ணீரைத் தேக்கி வைக்கும். இந்த நீரோட்டங்கள் திடீரென நிறுத்தப்பட்டால், மொத்த நீரும் ஒரு சிறிய பகுதியில் திடீரென ஒரு அபாயகரமான சக்தியுடன் இறங்கி பேரழிவை ஏற்படுத்துகிறது.

பெரும்பாலும் செங்குத்தான மலைகள் மேகங்கள் உருவாவதற்கு ஏற்ற இடமாகும். மேக வெடிப்பால் செங்குத்தான மலைச் சரிவுகளில் பாயும் நீரால் சேதமான கட்டமைப்புகளால் குப்பைகள், கற்பாறைகள் மற்றும் மரங்கள் வேரோடு பிடுங்கி வீசப்பட்டு அடித்து வரப்படுகின்றன.

சமீப காலங்களில் மேக வெடிப்புகள் ஆதிக்கம் செலுத்தும் நிகழ்வுகள் போன்ற தீவிர மழை நிகழ்வுகள் இமயமலைப் பகுதியில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.காண்டின் கர்வால் மற்றும் குமாவோன் பகுதியில் இயற்கையான மற்றும் பொதுவான நிகழ்வாகும். மேக வெடிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய பேரழிவு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்களைப் பாதிக்கிறது. உயிர்ப் பலி, உடைமைகள் இழப்பு, வாழ்வாதாரம் பாதிப்பு, உள் கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழலை சேதப்படுத்துகிறது.

ஏறக்குறைய ஒவ்வொரு ஆண்டும் உத்தரகாண்ட் மற்றும் இமயமலையின் பல பகுதிகள் மேக வெடிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆபத்துகளை அனுபவிக்கின்றன. ஆகஸ்ட் 1998ல் உகிமத் (ருத்ரபிரயாக்) மற்றும் மல்பா (பித்தோராகர்). ஆகிஸ்ட் 2001ல் ஃபாட்டா (ருத்ரபிரயாக்), ஆகஸ்ட் 2002ல் புரகேதார் (தெஹ்ரி), ஆகஸ்ட், 2012ல் ஆசி கங்கா (உத்தரகாசி), செப்டம்பர், 2012 உத்ரப்கிமாத் (உத்ரபிரயாக்) ஆகிய இடங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஜூன் 2013 'கேதார்நாத்தில் (ருத்ரபிரயாக்) உந்தரகாண்ட்டில் நிகழ்ந்த திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளு டன் தொடர்புடைய பேராபத்து சமீபத்திய மேக வெடிப்பு நிகழ்வுகளின் சில எடுத்துக்காட்டுகளாகும்" இவ்வாறு அரசு பள்ளி ஆசிரியர் செல்வம் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+