இன்றே கடைசி.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவுக்கு கெடு.. கரப்பான்பூச்சி கட்சி வார்னிங்
டெல்லி: 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' சார்பில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடந்தது. இந்நிலையில் தான் இன்றைக்குள் தர்மேந்திர பிரதான் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் வரும் வாரத்தில் இந்தியா முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்று 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' தலைவர் அபிஜித் தீ்ப்கே மத்திய அரசுக்கு வார்னிங் செய்துள்ளார்.
நம் நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புக்கான 'நீட்' மற்றும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கு எதிராக சிஜேபி எனும் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை நடத்தியது. இதில் பிற கட்சிகளின் மாணவர்கள் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' நிறுவனராக இருக்கும் அபிஜித் தீப்கே பங்கேற்றார்.' இந்த போராட்டத்தின்போது தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களின் இல்லங்களை சுற்றி 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் தான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே மத்திய அரசுக்கு கடும் வார்னிங் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: ''மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்றைக்கும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் டெல்லியில் மட்டும் நடக்கும் இந்த போராட்டம் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும். இந்த வாரத்திலேயே போராட்டம் முன்னெடுக்கப்படும். அதுமட்டுமின்றி டெல்லி ஜந்தர் மந்தரில் அடுத்த சனிக்கிழமையும் போராட்டம் நடத்தப்படும்.
மத்திய அ்மைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும். கடந்த 10-12 ஆண்டுகளில் ஹிந்து - முஸ்லிம் மத அரசியிலில் நம்மை சிக்க வைத்துள்ளனர். இது யாருக்காவது வேலையை கொடுக்குமா? இல்லாவிட்டால் யாருக்காவது வேறு வகையில் பலன் அளிக்குமா? இந்த பிரச்சனைக்காக நான் என்னை தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன்'' என்று ஆக்ரோஷமாக கூறினார்.
மேலும் அபிஜித் திப்கே தனது எக்ஸ் பக்கத்தில், ''எனது பெற்றோரை பார்க்க வீட்டுக்கு சென்றேன். ஓராண்டுக்கு மேலாக அவர்களை பார்க்காமல் இருந்த நிலையில் நான் வீட்டுக்கு சென்னேறன். அப்போது அவர்கள் கடந்த 15 நாட்களாக அதிகமாக துன்பப்பட்டனர்.
மிரட்டல்கள் காரணமாக வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை இருந்தது. அவர்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்லப்போகிறேன. இன்றைய போராட்டம் ஒரு முன்னோட்டம் மட்டுமே. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வருகை தந்ததற்கு நன்றி'' என்று கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications