22 குழந்தைகளை கொன்ற இருமல் சிரப்.. சென்னை நிறுவன உரிமையாளரின் ரூ.2.04 கோடி சொத்துகளை முடக்கிய ED

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் தனியார் நிறுவனம் தயாரித்த ‛கோல்ட்ரிப்' எனும் இருமல் சிரப் குடித்த பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து பலியாகினர். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிராவை சேர்ந்த குழந்தைகள் பலியாகினர். இந்நிலையில் தான் இருமல் மருந்து தயாரித்த ஸ்ரீசன் பார்மசூட்டிக்கல் மேனுஃபேக்ச்சர் எனும் நிறுவனத்தின் உரிமையாளரான ஜி ரங்கநாதனுக்கு சொந்தமான ரூ.2.04 கோடி மதிப்பிலான 2 அசையா சொத்துகளை இன்று முடக்கம் செய்தனர்.

சமீபத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் இருமல் மருந்து குடித்த பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து பலியாகினர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுபற்றி தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது.

coldrif-cough-syrup-case-ed-attaches-assets-worth-rs-2-04-crore-belongin-to-g-ranganathan-propriet

அதாவது இறந்த குழந்தைகள 'கோல்ட்ரிப்' இருமல் சிரப்பை குடித்தது தெரியவந்தது. அதுமட்டுமின்றி இந்த மருந்து நிறுவனத்தின் பெயர் ஸ்ரீசன் பார்மசூட்டிக்கல் மேனுஃபேக்ச்சர் என்பதும் தெரியவந்தது. அதோடு இந்த நிறுவனம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வருவது தெரியிவிந்தது.

இதையடுத்து மருந்து நிறுவனம் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை போலீசார் தீவிரமாக தேட தொடங்கினர். மத்திய பிரதேச தனிப்படை போலீசார் 75 வயது நிரம்பிய ரங்கநாதனை சென்னை கோடம்பாக்கம் நாகார்ஜூனாநகர் 2-வது தெருவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். மேலும் சிலருக்கு சட்டவிரோதமாக பணம் கைமாறியதும் தெரியவந்தது. அதுபற்றி அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது.

சென்னையில் உள்ள ரங்கநாதனின் வீடு, அலுவலகம் உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள், நிதி சார்ந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதுமட்டுமின்றி கலப்பட மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் தான் தற்போது நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனுக்கு சொந்தமான ரூ.2.04 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரங்கநாதன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாகசென்னை கோடம்பாக்கத்தில் உள்ள 2 சொகுசு பங்களாக்களை அமலாக்க்ததுறையினர் முடக்கம் செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+