Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முஸ்லீம்கள் பாதிக்கப்படுவதையும் படமாக எடுங்க என்று, கருத்து கூறிய ம.பி. ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ‛தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி நியாஸ் அகமது கானுக்கு அம்மாநில அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நாடு முழுவதும் பெரும் விவாத பொருளாக ‛தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் மாறியுள்ளது. 1990 காலக்கட்டத்தில் காஷ்மீர் பண்டித்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறியதை அடிப்படையாக கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக ஆளும் மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

மத்திய பிரதேசத்திலும் இந்த படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் படம் பார்க்க போலீசாருக்கு விடுப்பு வழங்கி அந்த மாநிலத்தை ஆளும் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு உத்தரவிட்டது.

ஐஏஎஸ் அதிகாரி

ஐஏஎஸ் அதிகாரி

இந்நிலையில் சத்தீஸ்கார் மாநிலத்தை சேர்ந்தவர் நியாஸ் அகமது கான் (வயது 50) மத்திய பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார். தற்போது அம்மாநில பொதுப்பணித்துறையில் துணை செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் மார்ச் 18ல் தனது டுவிட்டர் பக்கத்தில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்தார். அதில், ‛‛தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் காஷ்மீரில் பிராமணர்களின் வலியை காட்டுகிறது. அவர்கள் காஷ்மீரில் பாதுகாப்புடனும், மரியாதையுடனும் வாழ அனுமதிக்கப்பட வேண்டும். பல மாநிலங்களில் ஏராளமான முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றனர். இதையும் திரைப்படமாக உருவாக்க வேண்டும். முஸ்லிம்கள் ஒன்றும் பூச்சிகள் அல்ல. அவர்களும் மனிதர்கள் தான். இந்த நாட்டின் குடிமக்கள் தான்'' என குறிப்பிட்டு இருந்தார். இது சர்ச்சையானது.

ரூ.150 கோடி வருமானம்

ரூ.150 கோடி வருமானம்

அதன்பிறகு மார்ச் 20ல் இன்னொரு டுவிட்டர் பதிவில், ‛‛காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் ரூ.150 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. அருமை. காஷ்மீரி பிராமணர்களின் உணர்வுகளுக்கு மக்கள் மிகுந்த மரியாதை கொடுத்துள்ளனர். திரைப்பட தயாரிப்பாளரின் சம்பாத்தியத்தை பிராமண குழந்தைகளின் கல்விக்கும், காஷ்மீரில் அவர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கும் வழங்குவதை நான் மதிப்பேன். இது பெரும் தொண்டாக இருக்கும்'' என கூறியிருந்தார்.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்

விளக்கம் கேட்டு நோட்டீஸ்

இதற்கு மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அவர் கூறுகையில், ‛‛ நியாஸ் அகமது கானின் பதிவுகளை பார்த்தேன். இது ஒரு தீவிரமான பிரச்சனை. அவர் அரசு அதிகாரிகளுக்கான வரம்பை மீறியுள்ளார். மாநில அரசு அவருக்கு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி அவரின் கருத்துக்கான காரணங்களை கேட்கும் " என தெரிவித்தார். இந்நிலையில் நேற்று நியாஸ் அகமது கானுக்கு மத்திய பிரதேச அரசு சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதுி.

எதையும் மீறவில்லை

எதையும் மீறவில்லை

இதுகுறித்து நியாஸ் அகமது கான் கூறுகையில், "அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொருவருக்கும் கருத்து சுதந்திரத்தை வழங்கியுள்ளது. நானும் இந்த சுதந்திரத்தின் அடிப்படையில் தான் இருக்கிறேன். அரசாங்கம் என்ன நினைக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் சட்டம் அல்லது அரசியலமைப்பு விதிகளையோ மீறும் வகையில் நான் எதையும் செய்யவில்லை என்பது எனக்கு தெரியும். நான் அரசு, அரசியல் கட்சிக்கு எதிராக பேசவில்லை. ஒரு திரைப்படத்தை குறித்து மட்டுமே கருத்து தெரிவித்துள்ளேன். எனது 21 ஆண்டு முதல் முதலாக இந்த நோட்டீசை பெற்றுள்ளேன்.

தவறு செய்யவில்லை

தவறு செய்யவில்லை

நான் நாட்டு மக்களுக்கு நேர்மையான முறையில் பணி செய்து வருகிறேன். என் மீது ஊழல், நிதி முறைகேடு தொடர்பான வழக்குகள் கிடையாது. சப்-டிவிஷனல் அதிகாரி முதல் பஞ்சாயத்து துறை தலைமை அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளேன். எங்கும் என்மீது புகார் கிடையாது. ஒரு திரைப்படத்தைப் பற்றிய எனது கருத்தை வெளிப்படுத்துவது சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்கவர்களின் கோபத்தை சம்பாதித்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். பதிவுகளை நீக்கமாட்டேன். நான் எந்த விதிமீறலையும் செய்யவில்லை'' என்றார்.

சர்ச்சைக்கு புதிதல்ல

சர்ச்சைக்கு புதிதல்ல

ஐஏஎஸ் அதிகாரியான நயாஸ் அகமது கான் கடந்த 12 ஆண்டுகளில் கான் 7 புத்தகங்களை எழுதியுள்ளார். 2017ல் முத்தலாக் தொடர்பாக இவர் எழுத புத்தகம் வெளியிட்டார். இது சர்ச்சையானது. முஸ்லிம் மதகுருக்களின் கோபத்துக்கு ஆளானார். இவரது புத்தகம் தீவைத்து எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+