ஸ்விகி, இன்ஸ்டாமார்ட்டுக்கு எதிராக முறையீடு.. ஆன்லைன் விற்பனையை ஒழுங்குப்படுத்த கோரிக்கை!
டெல்லி: ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்வது இந்தியாவில் அமோகமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் இதனால் சிறு குறு வணிகர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறி, ஸ்விகி இன்ஸ்டாமார்ட், பிளிங் இட், செஃப்டோ, ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக இந்திய போட்டி ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
இதுதொடர்பாக 'வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் சங்கம்' மற்றும் 'அகில இந்திய நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு' தாக்கல் செய்துள்ள மனுவில்,

"வேகமான நுகர்வு சந்தையில் தங்கள் இருப்பை மட்டுமே உறுதி செய்யும் வகையில் செயல்பட்டு வரும் ஸ்விகி இன்ஸ்டா மார்ட், பிளிங் இட், செஃப்டோ நிறுவனங்களால், சிறு விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த நிறுவனங்கள் நம்ப முடியாத அளவுக்கு சலுகை விலைகளில் பொருட்களை விநியோகிப்பதோடு, இலவசங்களை அள்ளி வீசி வருகின்றனர். அதேபோல குறிப்பிட்ட பொருட்களை தங்கள் செயலி மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டு அந்த பொருட்களை பிற வணிகர்கள், விநியோகஸ்தர்களுக்கு கிடைக்காத வண்ணம் செய்து பிற விற்பனையாளர்களை ஒடுக்கி வருகின்றனர்.
இந்த செயலால் நாடு முழுவதும் உள்ள 1 கோடிக்கும் அதிகமான சிறு விற்பனையாளர்கள், சில்லரை வியாபாரிகள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரம் சிதைந்துள்ளது. எனவே இந்த டிஜிட்டல் சந்தைகளை மதிப்பீடு செய்து உரிய முறையில் ஒழுங்கு படுத்த வேண்டும்" என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்தியாவில் இணையம் வழியாக பொருட்கள் விற்பனை 20 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. 1999ம் ஆண்டு Rediff.com, IndiaMART ஆகியவை இணையதளம் வழியாக விற்பனையை தொடங்கின. 2000ம் ஆண்டு ebay தளம் இந்தியாவின் முதன்மையான இணையதள விற்பனை தளமாக இருந்தது. 2007-2008ம் ஆண்டு இந்த விற்பனை தளம் புதிய உச்சத்தை தொட்டது. காரணம் Flipkart, Snapdeal போன்றவை உள்ளே நுழைந்தன. இருந்தாலும் ஆல்லைன் வியாபாரத்தில் ஒரு குறை இருந்தது. எல்லா தரப்பு மக்களாலும் இதை அணுக முடியவில்லை என்பதுதான் அந்த பிரச்சனை.
2013-2014ம் ஆண்டுகளில் ஸ்மார்ட் போன்களின் வருகை உச்சத்தை எட்டுகிறது. இதனையடுத்து செல்போன் டேட்டா சர்வீஸை கொடுக்கும் இடத்திற்கு ஜியோ வருகிறது. தரமான நெட்வொர்க் மற்றும் ஸ்மார்ட் போன்களின் வருகை ஆன்லைன் வணிகத்தை அனைத்து தரப்பு மக்களுக்குமானதாக மாற்றுகிறது. Amazon India, Myntra, Jabong நிறுவனங்கள் இந்த காலத்தில்தான் நுழைய தொடங்குகின்றன. Cash on Delivery (COD) வசதியும் இவர்கள் காலத்தில்தான் தொடங்குகிறது.
இதன் தொடர்ச்சியாக Swiggy, Zomato, BigBasket ஆகியவை இணைய சந்தைக்குள் நுழைகின்றன. இன்று உலகின் மிகப்பெரிய இணைய வர்த்தக சந்தையாக இந்தியா உருவாகியிருக்கிறது. இன்றைய தேதியில் இதன் மதிப்பு ரூ.10 லட்சம் கோடி. இதுவே 2026ல் ரூ.17 லட்சம் கோடியாகவும், 2030ல் ரூ.32 லட்சம் கோடியாகவும் உயரும். இந்தியா உலக அளவில் மூன்றாவது பெரிய இணைய வர்த்தக தளமாக மாறும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications