நாடு திரும்புகிறார் ராகுல்.. புதிய தலைவரை தேர்வு செய்ய கூடுகிறது காங். காரிய கமிட்டி?
டெல்லி: வெளிநாட்டு பயணத்தை முடித்து நாடு திரும்புகிறார் ராகுல் காந்தி. அடுத்த வாரம் கூடும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்கின்றன டெல்லி தகவல்கள்.
இந்தியான் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு யார் தலைவர் என்பது இன்னமும் தெரியவில்லை. இது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவுதான். இதனால்தான் கர்நாடகாவில் பாஜக, கட்சி எம்.எல்.ஏக்களை கடத்திய போதும் தடுக்க முடியாமல் ஆட்சியை பறிகொடுத்தது.

தற்போது மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு குறிவைத்திருக்கிறது பாஜக. ஆனால் முதல்வர் கமல்நாத் தொடக்கம் முதலே பாஜகவின் வியூகங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் வெளிநாட்டு பயணங்களை முடித்துவிட்டு ராகுல் காந்தி அடுத்த சில நாட்களில் நாடு திரும்புகிறார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் மீண்டும் கூடுகிறது.
அக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறார். நேரு குடும்பத்தைச் சேர்ந்த பிரியங்கா காந்தி தலைவராக அறிவிக்கப்படுவாரா? அல்லது நேரு குடும்பத்துக்கு வெளியே ஒருவர் தலைவராக அறிவிக்கப்படுவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications