பிகே சொன்ன "4M" பிளான்.. பாஜகவின் அஸ்திவாரத்தை அசைக்க பார்க்கும் காங்கிரஸ்.. பின்னணியில் 2 பேர்!
டெல்லி: 2022 குஜராத் சட்டசபை தேர்தலை முன்னிட்டும், 2024 லோக்சபா தேர்தலை முன்னிட்டும் காங்கிரஸ் தலைமை தீவிர பிளானிங்கில் குதித்து உள்ளது. இதற்காக அக்கட்சி பிரஷாந்த் கிஷோரை அணுகி உள்ளது. இரண்டு தேர்தலுக்காகவும் காங்கிரஸ் மிகப்பெரிய திட்டம் ஒன்றை பிகே உதவியுடன் களமிறக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து அதன் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு எதிராக காங்கிரசின் ஜி23 தலைவர்கள் ஒன்று கூடி உள்ள நிலையில்தான் அக்கட்சி உட்கட்சி ரீதியான மாற்றங்களுக்கு தயாராகி வருகிறது.
அதோடு இந்த வருட இறுதியில் நடக்க இருக்கும் குஜராத் சட்டசபை தேர்தலுக்கும் காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. இதை முன்னிட்டே கடந்த சனிக்கிழமை சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களை அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் நேரில் சந்தித்தார்.

பிரஷாந்த் கிஷோர்
கடந்த வருடம் இவர்கள் சில முறை சந்தித்தனர். ஆனால் அந்த சந்திப்பில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது. இதனால் அப்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை பிரஷாந்த் கிஷோர் மீண்டும் சந்தித்து இருக்கிறார். இந்த சந்திப்பு 2024 லோக்சபா தேர்தல் மற்றும் இந்த ஆண்டு நடக்க உள்ள குஜராத் சட்டசபை தேர்தலை மையமாக வைத்து நடத்தப்பட்டது. இதில் பிரஷாந்த் கிஷோர் முக்கியமான ரிப்போர்ட் ஒன்றை காங்கிரஸ் தலைவர்களிடம் கொடுத்து இருக்கிறாராம்.

ரிப்போர்ட் பிரஷாந்த் கிஷோர்
அதாவது காங்கிரஸ் கட்சியை எப்படி மீட்பது. கட்சியை எப்படி மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வது என்று விளக்கும் வகையில் முக்கியமான திட்டங்கள் அடங்கிய ரிப்போர்ட்டை அவர் கொடுத்து இருக்கிறாராம். அதேபோல் Message, Messenger, Machinery மற்றும் Mechanics எனப்படும் 4M திட்டத்தையும் அவர் சமர்ப்பித்து இருக்கிறாராம். அதாவது இனி வரும் தேர்தல்களில் மக்களுக்கு காங்கிரஸ் அளிக்க போகும் மெசேஜ் என்ன. அதை கொண்டு செல்ல போகும் மெசேஞ்சர் அதாவது தலைவர் யார், அதை மக்களிடம் தெரிவிக்கும் நிர்வாகிகள் Machinery என்ன.. அதை எப்படி தெரிவிக்க போகிறார்கள் என்பதை திட்டமிடும் பிளான் ஒன்றை அவர் வடிவமைத்து இருக்கிறாராம்.

குஜராத் எப்படி
ஆனால் இதை பிகே முழுமையாக காங்கிரஸ் தரப்பிடம் தெரிவிக்கவில்லை. அவரின் கோரிக்கைகளுக்கு காங்கிரஸ் செவி மடுக்கும் பட்சத்தில் அவர் முழு திட்டத்தை அளிப்பார் என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் குஜராத் தேர்தல் பற்றியும் இவர்கள் ஆலோசனை செய்துள்ளனர். பிகே உதவியுடன் குஜராத்தில் பட்டிதார் இனப்பிரிவான Leuva Patel பிரிவை சேர்ந்த நரேஷ் பட்டேல் என்ற இளம் தலைவரை காங்கிரசுக்கும் இழுக்க சோனியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

என்ன நோக்கம்?
குஜராத்தில் பட்டிதார் இனப்பிரிவு இல்லாமல் வெற்றிபெற முடியாது. அதிலும் அங்கு கடந்த 5 முதல்வர்களை பட்டிதார் இனப்பிரிவு மக்களே தேர்வுசெய்துள்ளனர் . அதில் 4 முதல்வர்கள் உட்பிரிவான Leuva பட்டேல் இனப்பிரிவை சேர்ந்தவர்கள். மொத்தமாக உள்ள 182 இடங்களில் 60 இடங்களில் வெற்றியை இவர்கள்தான் தீர்மானிப்பார்கள். கடந்த 2017 சட்டபை தேர்தலில் பாஜக 90 இடங்களில் மட்டுமே வென்றது. அங்கு பாஜக ஆதரவு குறைய காரணம், அவர்கள் பட்டேல் இனப்பிரிவினர் இடையே ஆதரவை இழந்ததால்தான்.

அரசியலையே மாற்றியது
ஹர்திக் பட்டேல் காங்கிரஸ் பக்கம் வந்ததால் பாஜக அங்கு ஆதரவை வெகுவாக இழந்தது. 30 வருடங்களுக்கு முன் அங்கு காங்கிரஸ் முதல்வர் மாதவ் சிங் பட்டிதார் இன மக்களை புறக்கணித்துவிட்டு சாத்திரிய - அரிஜன - முஸ்லீம் - ஆதிவாசி உருவாக்கினார். இதனால் காங்கிரஸ் அங்கு பட்டேல் இன மக்கள் ஆதரவை இழந்தது. அதை இப்போது பிகே உதவியுடன் நரேஷ் பட்டேல் மூலம் மீட்டு எடுக்க காங்கிரஸ் முயன்று வருகிறது. ஏற்கனவே ஹர்திக் பட்டேல் மூலம் அங்கு பட்டேல் இன மக்கள் இடையே காங்கிரஸ் ஆதரவு உயர்ந்துள்ளது.

பாஜக உணர்ந்துள்ளது
காங்கிரசின் இந்த திட்டத்தை உணர்ந்துதான் மீண்டும் எப்படியாவது பட்டேல் சமூக மக்களை பிடிக்க பாஜக முயன்று வருகிறது. சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைத்ததிலும் சரி, விஜய் ரூபாணியை நீக்கிவிட்டு பட்டித்தார் இன பிரிவை சேர்ந்த புபேந்திரபாய் பட்டேலை முதல்வராக நியமித்ததிலும் சரி.. பாஜக ஸ்மார்ட்டாகவே செயல்பட்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் ஹர்திக் பட்டேலை காங்கிரஸ் கட்சி செயல்தலைவராக நியமித்தது.

ஹர்திக் பட்டேல்
ஆனால் இவர் மட்டும் இருந்தால் முழு வெற்றியை பெற்றுவிட முடியாது என்பதால்தான் நரேஷ் பட்டேலை வளைக்கும் திட்டத்தில் காங்கிரஸ் இறங்கி உள்ளது. இதை பற்றி பிகேவுடன் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. நரேஷ் பட்டேல் வந்தால் ஹர்திக் பட்டேல் அதை கொஞ்சம் எதிர்க்க வாய்ப்பு உள்ளது என்பதால் இன்னொரு பக்கம் ஆம் ஆத்மி கட்சி ஹர்திக் பட்டேலை தம் பக்கம் இழுக்க முயன்று வருகிறது. இதை சமாளித்து ஹர்திக் பட்டேல் .. நரேஷ் பட்டேல் இருவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து காங்கிரசை குஜராத்தில் வெற்றிபெற வைத்து பாஜகவின் அஸ்திவாரத்தை அசைக்கும் பிளானில் காங்கிரஸ் இருப்பதாக கூறப்படுகிறது.. பிகே காங்கிரசுடன் சுமுகமாக போகும் பட்சத்தில் இந்த பிளான் திட்டமிட்டபடி களமிறக்கப்படும் என்கிறார்கள்!
-
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications