தகிக்கும் தலைநகர்.. சோனியா வீடு முன் காக்கிகள்! கொதித்தெழுந்த காங்கிரஸ் - எம்பிக்களுக்கு அழைப்பு
டெல்லி: நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை சீல் வைத்து சோனியா காந்தி வீடு முன் போலீசார் குவிக்கப்பட்டு உள்ள நிலையில் எம்பிக்கள் கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
நாட்டின் விடுதலைக்கு முன்னர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பத்திரிகை இழப்பை சந்தித்ததால் காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் வழங்கியது.
இருப்பினும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மூடப்பட்டு 2010 ஆம் ஆண்டு அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியா என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன. இந்நிறுவனத்தின் 76% பங்குகள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி வசம் உள்ளன. இந்த நிலையில் பாஜக எம்.பி. சுப்பிரமணியசுவாமி பங்கு பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி வழக்கு தொடர்ந்தார்.

அமலாக்கத்துறை வழக்கு
இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அந்நிய செலாவணி மோசடி நடந்துள்ளதாக கூறி அமலாக்கத்துறையும் வழக்கு தொடர்ந்தது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு நிதி வழங்கியது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

ராகுல் காந்தியிடம் விசாரணை
இந்த நிலையில் சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராகுல் காந்தி மட்டும் கடந்த ஜூன் மாதம் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் பல கட்ட விசாரணைகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் அப்போது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சோனியா காந்தியிடம் விசாரணை
கொரோனா பாதிப்பில் இருந்து சோனியா காந்தி மீண்டதை தொடர்ந்து அவர் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதனை தொடர்ந்து கடந்த ஜுலை 21 ஆம் தேதி மற்றும் கடந்த 26 ஆம் தேதி சோனியா காந்தி விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அமலாக்கத்துறையையும் மத்திய அரசையும் கண்டித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி எம்பி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீல் வைப்பு
இந்த நிலையில் இன்று மாலை நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். அத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அவர்கள் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். மேலும் சோனியா காந்தியின் வீடு முன்பாக ஏராளமாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

எம்பிக்களுக்கு அழைப்பு
இந்த நிலையில் நாளை காலை காங்கிரஸ் கட்சியின் லோக்சபா மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நாளை காலை 9:45 மணியளவில் காங்கிரஸ் நாடாளுமன்ற அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என்றும், இதில் கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications