மதச்சார்பின்மை, சோசலிசம் எங்கே? அரசியல் சாசன முன்னுரை குறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி
டெல்லி: அரசியல் சாசன முன்னுரையிலிருந்து 'மதச்சார்பின்மை' மற்றும் 'சோசலிசம்' உள்ளிட்ட சொற்கள் நீக்கப்பட்டிருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சித்துள்ளார்.
ஜி20 நாடுகளின் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த கையோடு தற்போது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. இன்று முதல் வரும் 22ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று நிகழ்வுகள் அனைத்தும் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இரண்டாம் நாளான நாளை முதல் கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வு வரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுகிறது.

இதனால் பிரதமர் மோடி உட்பட மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் ஆகியோர் பழைய நாடாளுமன்றத்திலிருந்து புதிய நாடாளுமன்றத்திற்கு இடம்பெயர்ந்தனர். புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்படும் என்று பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிவித்ததிலிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவின் போது குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப்பட்டதும் விவாதத்திற்கு உள்ளானது.
இப்படி இருக்கையில் நேற்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இடம்பெயர்ந்த எம்பிக்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசன பிரதிகளில் முன்னுரையில் 'மதச்சார்பின்மை', 'சமதர்மம்' சொற்கள் நீக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "எங்களுக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்பின் புதிய நகல்களில் மதச்சார்பின்மை' மற்றும் 'சோசலிசம்' உள்ளிட்ட சொற்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.
1976ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு பின்னர் இந்த வார்த்தைகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் எம்பிக்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசன பிரதிகளில் முன்னுரையில் இந்த வார்த்தைகள் நீக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. அவர்களின் (மத்திய அரசின்) நோக்கம் சந்தேகத்திற்குறியதாக இருக்கிறது. இந்த திருத்தம் மிகவும் புத்திசாலித்தனமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. நான் இந்த பிரச்னை குறித்து விவாதங்களை எழுப்ப முயற்சித்தேன். ஆனால், எனக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை" என்று கூறியுள்ளார்.
பல்வேறு இந்துத்துவா மற்றும் வலதுசாரி அமைப்புகள் அரசியலமைப்பு சட்டத்திலிருந்து இந்த வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது அதற்கேற்றார் போல அரசியல் சாசன பிரதிகளில் இந்த வார்த்தைகள் நீக்கப்பட்டிருப்பது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
-
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
டெல்லி பூதமும்.. அறிவாலயம் யுக்தியும்.. திமுகவின் ஸ்மார்ட் தேர்தல் அஸ்திரம்! பாஜக எதிர்பார்க்கலயே -
4 மணி நேரம்தான் தூக்கம்.. போனை போட்டு விளாசிய ஸ்டாலின்.. விக்கித்த தலைகள்.. என்ன நடந்தது? -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
அப்செட்டில் ஸ்டாலின்.. ராகுல் பிரசாரத்திற்கு வராததால் காங்கிரஸின் 28 தொகுதிகளிலும் சிக்கல்.. பின்னணி -
4 மணி நேர ‘உறக்கம்’.. பொறுப்பாளர்களை போனில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் ஸ்டாலின்! அறிவாலய அலர்ட்!












Click it and Unblock the Notifications