காங். கூட்டம் முடிந்த கொஞ்ச நேரத்தில்.. மூத்த தலைவர்கள் திடீர் மீட்டிங்.. நீண்ட ஆலோசனை.. பின்னணி!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் முடிந்த பிறகு சில மணி நேரங்களில் காங்கிரஸின் குலாம் நபி அசாத் வீட்டிற்கு காங்கிரஸ் மூத்த உறுப்பினர்கள் வந்து ஆலோசனை நடத்தியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார் என்பதற்கான விவாதங்கள் தற்போது எழுந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் 23 பேர் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம்தான் இந்த சர்ச்சைக்கு காரணம்.
காங்கிரஸ் தலைமை வலிமையாக இல்லை, வலிமையான, துடிப்பான தலைவர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும், மாநில காங்கிரஸ் கட்சிக்குள் சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.

மீட்டிங் நடத்தினர்
இந்த கடிதத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. இந்த நிலையில் இந்த கூட்டத்திற்கு பிறகு சில நிமிடங்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸின் குலாம் நபி அசாத் வீட்டிற்கு காங்கிரஸ் மூத்த உறுப்பினர்கள் ஆலோசனை சென்று நடத்தியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடிதம் எழுதினார்
மணீஷ் திவாரி, சசி தரூர், கபில் சிபல் ஆகியோர் உட்பட பல முக்கிய தலைவர்கள் இந்த ஆலோசனையில் ஈடுபட்டனர். காங்கிரசில் தலைமைக்கு எதிராக கடிதம் எழுதிய 23 பேரில் 21 மூத்த தலைவர்கள் திடீர் மீட்டிங்கில் கலந்து கொண்டனர். 1 மணி நேரம் இவர்கள் முக்கியமான விஷயங்களை ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

சோனியா தலைவர்
சோனியா இடைக்கால தலைவராக தொடரும் நிலையில் மீட்டிங் நடந்தது முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் கடிதம் எழுதிய மூத்த தலைவர்கள் பலர் இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் சோனியாவின் பதவி நீட்டிப்பு குறித்தும், அடுத்த தலைவரை எப்படி 6 மாதங்களுக்குள் தேர்வு செய்வது என்பது குறித்தும் ஆலோசனை செய்ததாக கூறுகிறார்கள்.

ஏன் சந்தேகம்
இன்று நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில் இந்த 23 தலைவர்களையும், பாஜகவின் ஆதரவாளர்கள் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்ததாக செய்திகள் வெளியானது. இதனால் கபில் சிபல் உள்ளிட்ட தலைவர்கள் ராகுலுக்கு எதிராக பேசி இருந்தனர். ஆனால் அதன்பின் இந்த செய்திகளுக்கு ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்தார். இதை அடுத்து மூத்த தலைவர்கள் கோபம் தணிந்தது குறிப்பிடத்தக்கது... தற்போது இவர்கள் எல்லோரும் சேர்ந்து மீட்டிங் நடத்தி இருப்பது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.












Click it and Unblock the Notifications