ஜாதிவாரி கணக்கெடுப்பு.. காங்கிரஸ் செய்த அரசியல்.. ஒரே அடியாக முற்றுப்புள்ளி வைத்த பாஜக!
டெல்லி: பல ஆண்டுகளாக, காங்கிரஸ் கட்சி சமூக நீதியை ஆதரிப்பதாகக் கூறி வருகிறது. ஆனால் சாதி கணக்கெடுப்பு என்று மட்டும் வந்துவிட்டால்.. காங்கிரஸ் கட்சி மாறி மாறி நிலைப்பாடுகளை எடுத்து வருகிறது. பொய்யான வாக்குறுதிகள், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், மக்களை திசை திருப்புவது, இரட்டை நிலைப்பாடு என்று இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மாறி மாறி முடிவுகளை எடுத்து இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து, காங்கிரஸ் தொடர்ந்து விரிவான சாதி கணக்கெடுப்பை நடத்துவதைத் தவிர்த்து வந்துள்ளது. இதனால் நம் நாட்டிற்கு முக்கியமான தரவுகள் கிடைக்கவில்லை.

காங்கிரஸ் ரெக்கார்ட்: ஜாதி கணக்கெடுப்பில் தொடர்ந்து மௌனம்
இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து, சாதி கணக்கெடுப்பு கோரிக்கையை காங்கிரஸ் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது, சாதி அடிப்படையிலான மக்கள்தொகை குறித்த முக்கிய தரவுகளை சேகரிப்பதை தீவிரமாகத் தடுத்து வருகிறது. கடைசியாக விரிவான சாதி தரவு 1931 இல் பிரிட்டிஷ் ஆட்சியின் போது சேகரிக்கப்பட்டது, மேலும் 1941 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி தகவல்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும், இரண்டாம் உலகப் போரின் இடையூறுகள் காரணமாக அது ஒருபோதும் வெளியிடப்படவில்லை.
1951 ஆம் ஆண்டு நாடு தனது முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியபோது, காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் சாதி கணக்கெடுப்பை முற்றிலுமாக கைவிட முடிவு செய்தது. சாதி கணக்கெடுப்பு போன்ற இந்த முக்கியமான விஷயத்தில் பல ஆண்டுகளாக அரசுகளின் செயலற்ற தன்மைக்கு இந்த முடிவு முக்கியமான காரணமாக அமைந்தது.
இதற்கு நிர்வாக சிக்கல்கள் காரணம் இல்லை. இது வேண்டுமென்றே செய்யப்பட்ட அரசியல் முடிவு ஆகும். இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த, நாட்டின் வளங்களை சரியாக பங்கிட, பிரதிநிதித்துவத்தை சரியாக கணக்கிட இந்த சாதி கணக்கெடுப்பு அவசியம். மாநில அரசுகளின் இந்த கோரிக்கைகளை நீண்ட ஆண்டுகளாக காங்கிரஸ் புறக்கணித்து வந்தது. இந்த அநீதியை சரிசெய்ய பல வாய்ப்புகள் இருந்தபோதிலும், காங்கிரஸ் தொடர்ந்து செயல்படத் தவறிவிட்டது. கிட்டத்தட்ட இடைநிலை ஜாதி கட்சிகள், அமைப்புகள், மாநில கட்சிகள் வைத்த கோரிக்கைகளை காங்கிரஸ் வேண்டுமென்றே புறக்கணித்தது. பிற்படுத்தப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவம் பெறாமல் போக இது முக்கியமான காரணமாக அமைந்தது.
UPA ஆட்சி காலம்: முடக்கப்பட்ட சாதி தரவுகள்
2010 ஆம் ஆண்டில், பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நெருங்கி வந்த போது, அப்போதைய சட்ட அமைச்சர் எம். வீரப்ப மொய்லி, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி தரவுகளைச் சேர்க்குமாறு வலியுறுத்தினார். இருப்பினும், காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் இந்த கோரிக்கையை நிராகரித்தது.
நிர்வாக சிக்கல்களை மேற்கோள் காட்டி இதை மறுத்தது. பல பக்கங்களில் அழுத்தம் இருந்தபோதிலும், காங்கிரஸ் கட்சி 2011 இல் சமூக-பொருளாதார சாதி கணக்கெடுப்பை (SECC) நடத்த மட்டுமே ஒப்புக்கொண்டது. இருப்பினும், இந்த கணக்கெடுப்பு பிரதான மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து தனித்தனியாக நடத்தப்பட்டது. ஜாதி கணக்கெடுப்பு வெளியிடப்படவில்லை.
SECC கணக்கெடுப்பு காரணமாக வரி செலுத்துவோருக்கு கிட்டத்தட்ட ரூ. 5,000 கோடி செலவானது. ஆனால் இதில் வெளிப்படைத்தன்மை இல்லாத நிலை ஏற்பட்டது. சமூக-பொருளாதார தரவு இறுதியில் 2016 இல் வெளியிடப்பட்டாலும், சாதி தரவு வசதியாக மறைக்கப்பட்டு இன்றுவரை வெளியிடப்படாமல் உள்ளது. காங்கிரஸின் இந்த நடவடிக்கை OBCகள், SCகள் மற்றும் STகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும். அரசியல் செயல்பாட்டில் அவர்களின் சரியான பங்கை மறுத்தது.
கர்நாடகாவின் சந்தேகத்திற்குரிய 'கணக்கெடுப்பு': உண்மையான சாதி கணக்கெடுப்பு இல்லை
கடந்த மூன்று ஆண்டுகளில், பீகார், தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற பல பாஜக அல்லாத ஆளும் மாநிலங்கள் சாதி கணக்கெடுப்புகளை நடத்தியிருந்தாலும், இந்த விவகாரத்தில் கர்நாடகாவின் அணுகுமுறை மிகவும் கேள்விக்குரியதாகவே உள்ளது. ஆய்வுகள் நடத்தப்பட்ட நேரத்தில் இந்த மாநிலங்கள் அனைத்தும் பாஜக அல்லாத அரசுகளால் ஆளப்பட்டன.
சமீபத்திய ஆண்டுகளில், பீகார், தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற பாஜக அல்லாத மாநிலங்கள் சாதி கணக்கெடுப்புகளை நடத்தின, ஆனால் காங்கிரஸ் தலைமையிலான சித்தராமையா அரசாங்கத்தின் கீழ் கர்நாடகாவின் அணுகுமுறை கவலையளிக்கிறது. கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு 2015 இல் 'சமூக-பொருளாதார மற்றும் கல்வி கணக்கெடுப்பை' நடத்தியது. இருப்பினும், அறிக்கை முடிக்கப்பட்ட போதிலும், அந்த அறிக்கை பல ஆண்டுகளாக வெளியிடப்படாமல் இருந்தது. பிப்ரவரி 2024 இல் கடுமையான அழுத்தத்தின் கீழ் மட்டுமே வெளியிடப்பட்டது.
காங்கிரஸின் முக்கிய தலைவரான துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூட, வொக்கலிகர்கள் மற்றும் லிங்காயத்துக்கள் போன்ற செல்வாக்கு மிக்க சமூகங்களின் எதிர்வினைக்கு பயந்து, அறிக்கை வெளியிடுவதை எதிர்த்தார். சாதி கணக்கெடுப்பை வெளியிடுவதில் தாமதம் மற்றும் கணக்கெடுப்பில் வெளிப்படைத்தன்மை இல்லாதது, சமூக நீதி என்று சொல்லி சுற்றும் காங்கிரஸ் மீது கடுமையான கேள்விகளை சந்தேகங்களை எழுப்பியது. விரிவான மற்றும் வெளிப்படையான சாதி கணக்கெடுப்பை நடத்துவதற்குப் பதிலாக, தேர்தல் ஆதாயத்திற்காக சாதி அடிப்படையிலான பிளவுகளை ஆழப்படுத்த உதவும் அரசியல் ரீதியான கணக்கெடுப்புகளை காங்கிரஸ் வலியுறுத்தியது.
போலியான மாநில அளவிலான கணக்கெடுப்புகளுக்கு பணத்தை வீணாக்குவதை நிறுத்துங்கள்:
பிரதமர் மோடியின் அரசாங்கத்தின் கீழ், பாஜக முறையான, நாடு தழுவிய சாதி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது. வெளிப்படையான, எல்லோரையும் உள்ளடக்கிய மற்றும் அறிவியல் பூர்வமான முறையில் நடத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் போன்ற கட்சிகள் இதில் அரசியல் செய்வதை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் மாநில அளவிலான கணக்கெடுப்பு, அதில் வரும் பொய்யான ரிசல்ட், அதற்கு ஆகும் பல கோடி செலவுகளை தடுக்க இந்த முடிவு உதவும்.
இதற்கு கர்நாடகா ஒரு சரியான உதாரணம். 2015 ஆம் ஆண்டில், காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா மாநிலம் முழுக்க "சமூக-பொருளாதார" கணக்கெடுப்பை நடத்தினார், பின்னர் அந்த அறிக்கையை ஒன்பது ஆண்டுகள் புதைத்து வைத்தார். வெளியிடவே இல்லை. ஏன்? ஏனெனில் அது சில சமூகங்களை சங்கடப்படுத்தியது. காங்கிரஸ் உண்மையை விரும்பவில்லை. அது மக்களை ஏமாற்றி அவர்களை கட்டுப்படுத்துவதை விரும்பியது.
ஓபிசி, எஸ்சி, மற்றும் எஸ்டி தலைவர்களை அவமதித்த காங்கிரஸ்?
இந்த சாதி கணக்கெடுப்பு விவகாரத்தில்.. பின்தங்கிய சமூகங்களை காங்கிரஸ் எவ்வாறு நடத்தியது .. எப்படி ஏமாற்றியது என்று பலருக்கும். சோனியா காந்திக்கு கட்சியில் வழி வகுக்கும் வகையில், மூத்த ஓபிசி தலைவரான சீதாராம் கேசரி, காங்கிரஸ் தலைமையகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஓபிசி முதல்வராக இருந்த வீரேந்திர பாட்டீல் அவமானப்படுத்தப்பட்டு, கண்ணியமின்றி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்தியாவின் மிக பெரிய தலித் தலைவர்களில் ஒருவரான ஜகஜீவன் ராம், காங்கிரஸ் அமைப்பிற்குள் ஒருபோதும் உயர் பதவிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கர், இந்து சட்ட மசோதாவை எதிர்த்து ராஜினாமா செய்தபோது காங்கிரஸால் ஓரங்கட்டப்பட்டார், மேலும் அவருக்கு கட்சியில் ஆதரவு வழங்கப்படவில்லை. இந்தியாவின் இரண்டாவது தலித் ஜனாதிபதியான ராம் நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்தில் சோனியா காந்தியிடமிருந்து ஒரு மரியாதைக்குரிய அழைப்பை கூட பெறவில்லை. இந்தியாவின் ஜனாதிபதியான முதல் பழங்குடிப் பெண் திரௌபதி முர்முவை பாஜக பரிந்துரைத்தபோது, காங்கிரஸ் அவரை ஆதரிக்கவில்லை. இன்னும் மோசமாக, சித்தராமையா அவரை ஒரு ஒருமையில் பேசி விமர்சனம் செய்தார். அந்த அளவிற்குத்தான் ஓபிசி, எஸ்சி, மற்றும் எஸ்டி தலைவர்களை காங்கிரஸ் நடத்தி உள்ளது.
நடவடிக்கை எடுக்கும் பாஜக, வெற்று பேச்சு பேசும் காங்கிரஸ்
பிரதமர் மோடி அரசாங்கத்தின் தலைமையில், பட்டியல் சாதியினருக்கான உள் இடஒதுக்கீடுகளை ஆராய ஒரு தேசிய குழு நியமிக்கப்பட்டது. இது வரலாற்று ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கான அரசின் தெளிவான மற்றும் தீர்க்கமான நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. தெலுங்கானா போன்ற காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்கள் இதைப் பின்பற்றத் தூண்டியது. தெலுங்கானாவின் 2024 சமூக, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார சாதி கணக்கெடுப்பு (SEEEPC) இதையடுத்தே நடத்தப்பட்டது. மாநிலத்தின் 98% மக்களிடம் இதற்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பு பிப்ரவரி 2025 இல் நிறைவடைந்தது.
சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கருதப்படும் இந்த கணக்கெடுப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, வருமானம் மற்றும் சமூக இயக்கம் போன்ற முக்கியமான விஷயங்களின் கணக்கெடுப்பாக அமைந்தது இதேபோல் கர்நாடகாவில், சித்தராமையா தலைமையிலான அரசாங்கம் 2024 நவம்பரில் உள் இடஒதுக்கீடு குறித்த ஆய்வு செய்ய ஆணையம் அமைத்தது. இந்த ஆணையத்திற்கு தலைமை தாங்க நீதிபதி நாகமோகன் தாஸை நியமித்தனர். சித்தராமையா மீண்டும் ஆட்சிக்கு வந்தபோதும் கூட இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை. ஆணையத்தின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படாமல் உள்ளன. காங்கிரஸ் எந்த அளவிற்கு இந்த விவகாரத்தில் மக்களை ஏமாற்றுகிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு.
காங்கிரஸ் கட்சியின் சர்ச்சைக்குரிய நிலைப்பாடுகள்
காங்கிரஸ் கட்சி வரலாற்று ரீதியாக சாதி கணக்கெடுப்பு தொடர்பான தவறான, நிலைப்பாடுகளை எடுத்துள்ளது. ஒரே நிலைப்பாட்டில் இல்லாமல் நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றி உள்ளது.
குறிப்பாக 2011 சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பில் (SECC) சாதி தரவுகளை அது எவ்வாறு கையாண்டது என்று பலருக்கும் தெரியும்.
SECC (2011): காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்தின் கீழ், SECC 2011 இல் சாதி தரவுகளை சேகரிக்கும் நோக்கத்துடன் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. இருப்பினும், சாதி சார்ந்த தரவு ஒருபோதும் வெளிப்படுத்தப்படவில்லை. அதாவது கணக்கெடுப்பு நடத்தினாலும் அந்த கணக்கை வெளியிடவில்லை.
1980களில், மண்டல் கமிஷன் சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில், ஓபிசிக்களுக்கு 27% இடஒதுக்கீட்டை பரிந்துரைத்தது, இது இறுதியில் 1990 இல் செயல்படுத்தப்பட்டது. காங்கிரஸ் இடஒதுக்கீடு கொள்கையை ஆதரித்தாலும், ஜாதி கணக்கெடுப்பை நேரடியாக ஆதரிக்கவில்லை. அப்படியே ஆதரித்தாலும் ஜாதி கணக்கெடுப்பு விவரங்களையும் வெளியிடவில்லை.
சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவுகளை உயர்த்தும் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கவே இல்லை.
காங்கிரஸ் வரலாற்று ரீதியாக சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை அவ்வப்போது ஆதரித்தும், அவ்வப்போது எதிர்த்து மாறி மாறி நிலைப்பாடுகளை எடுத்துள்ளது.
செயல்பட வேண்டிய நேரம் - ஜாதி கணக்கெடுப்பை தடுக்க வேண்டாம்
தேசிய சாதி கணக்கெடுப்பு என்பது வெறும் எண்களைப் பற்றியது அல்ல. இது சமூக யதார்த்தங்களை புரிந்து கொள்வது, பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, , சமத்துவமின்மையை போக்குவதுமற்றும் இந்தியாவின் வளர்ச்சியை உறுதி செய்வது. ஒவ்வொரு சமூகமும் அதன் நியாயமான பங்கைப் பெறுவதை உறுதி செய்வது பற்றியது இந்த சாதி கணக்கெடுப்பு. காங்கிரஸ் பல வருடங்களாக செய்ய தவறியதை தற்போது மத்திய பாஜக அரசு துணிச்சலாக செய்ய முடிவெடுத்துள்ளது. அரசியல் ஆதாயங்களுக்காக இதில் காங்கிரஸ் முடிவெடுக்காமல் இருந்தது. ஆனால் பாஜக துணிச்சலாக இதில் முடிவெடுத்துள்ளது. இந்தியாவின் உண்மையான முகத்தை பிரதிபலிக்கும் சாதி கணக்கெடுப்புக்கு பாஜக ஒருவழியாக ஒப்புதல் வழங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications