தேர்தல் பத்திரம், ரஃபேல், பெகாசஸ்.. பாஜக அரசின் மெகா ஊழல்கள் மீது விசாரணை- காங்கிரஸ் பரபர வாக்குறுதி
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக அரசின் 10 ஆண்டுகால தேர்தல் பத்திரம், ரஃபேல் விமானங்கள் கொள்முதல், பெகாசஸ் உளவு விவகாரம் ஆகிய ஊழல் முறைகேடுகள் தொடர்பாக காங்கிரஸ் ஆட்சியில் விசாரணை நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு சமூக நீதி சார்ந்த வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. புதிய கல்விக் கொள்கை மறுபரிசீலனை, நீட் உள்ளிட்ட மத்திய அரசின் தேர்வுகள் குறித்து மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம், நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், ஒடுக்கப்பட்ட மாணவர்கள் கல்வி நிலையங்கள் வன்கொடுமைக்குள்ளாவதைத் தடுக்க ரோஹித் ரெமுலா சட்டம் கொண்டுவரப்படும், 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊதியம் ரூ400 ஆக உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் பாஜக அரசின் 10 ஆண்டுகால ஊழல்கள் பட்டியலிடப்பட்டு இவை தொடர்பாகவும் விசாரிக்கப்படும் எனவும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக ஆட்சிக் காலத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இஸ்ரேலின் பெகாசஸ் ஒட்டு கேட்பு கருவிகள் வாங்கப்பட்டன. தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டு கட்சிகளுக்கு நன்கொடைகள் பெற வழிவகை செய்யப்பட்டது. நாட்டின் வங்கிகளின் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியவர்கள் நாட்டைவிட்டே தப்பி ஓடினார்கள்.. இந்த விவகாரங்கள் அனைத்தும் குறித்தும் அதாவது 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது காங்கிரஸின் இந்த தேர்தல் அறிக்கை.
தேர்தல் பத்திரம் விவகாரத்தில் மத்திய அரசின் சட்டமே செல்லாது என அண்மையில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்திருந்தது. பணமதிப்பிழப்பின் மூலம் கறுப்பு பணம் ஒழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கறுப்பு பணம் இன்னமும் ஒழிக்கப்படவும் இல்லை- வெளிநாட்டில் இருந்து மீட்கப்படவும் இல்லை. ஆகையால் இவை குறித்து விசாரணை நடத்தப்படும் என்கிறது காங்கிரஸ்.
மேலும் பல்வேறு ஊழல் வழக்குகளை எதிர்கொண்ட நிலையில் பாஜகவில் இணைந்ததால் அந்த வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன. இத்தகைய வழக்குகள் மறு ஆய்வு செய்யப்பட்டு மீண்டும் விசாரிக்கப்படும் என்பதும் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி.
-
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications