Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வலிமையற்ற பெண்மணி.. குடியரசு தலைவரை இகழும் வகையில் பேசினாரா சோனியா காந்தி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் துவக்க உரையை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிகழ்த்தினார். அவரின் உரை மிக சிறப்பாகவும், வலிமைமிக்கதாகவும் அமைந்து இருந்தது. ஆனால் இந்த உரையை கிண்டலடித்த காங்கிரஸ் எம்பி சோனியா காந்தி.. குடியரசுத் தலைவரை இகழும் வகையில் அவரை "poor lady".. அதாவது வலிமையில்லாத பெண்மணி என்று விமர்சனம் செய்தார்.

குடியரசுத் தலைவருக்கு பேசும் அளவிற்கு உடலில் சக்தி இல்லை. அவர் சக்தியை எல்லாம் இழந்துவிட்டார். வலிமையில்லாத பெண்மணி.. பாவம் அவருக்கு பேசும் அளவிற்கு கூட சக்தி இல்லை என்று கிண்டலாக கூறினார்.

sonia gandhi droupadi murmu

சோனியா காந்தியின் கருத்துக்கு ராஷ்டிரபதி பவன் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், குடியரசுத் தலைவர் அலுவலகத்தின் கண்ணியத்துக்குக் கேடு விளைவிப்பதாகக் சோனியா காந்தியின் பேச்சு இருப்பதாக கூறியது. விளிம்புநிலை சமூகங்கள் மற்றும் விவசாயிகளின் பிரதிநிதியான ஜனாதிபதி முர்முவை அவமானப்படுத்தும் விதமாக சோனியாவின் கருத்து உள்ளது. மக்களின் கவலைகளுக்கு குரல் கொடுப்பதில் எப்போதும் முர்மு உறுதியாக இருக்கிறார்.. அவருடைய அர்ப்பணிப்பு ஒருபோதும் சோர்வடையாது.. அவரை இப்படி கிண்டல் செய்வது சரியானது கிடையாது என்று சோனியா காந்தியின் கருத்துக்கு ராஷ்டிரபதி பவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் பதில்:

சோனியா காந்தியின் இந்த கருத்தை விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடி, இது நாட்டின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதியை அவமதிப்பதாக உள்ளது. அதேபோல் பெண்களை சோனியா காந்தி நேரடியாக அவமதிப்பதாக விமர்சனம் வைத்தார்.

"காங்கிரஸ் அரச குடும்பம் இப்போது ஜனாதிபதியை வெளிப்படையாக அவமரியாதை செய்கிறது" என்று பிரதமர் மோடி விமர்சனம் வைத்தார். பழங்குடியின சமூகங்கள் மீதான கட்சியின் வெறுப்பை சோனியா காந்தி வெளிப்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.

sonia gandhi droupadi murmu


காங்கிரஸும் அதன் பழங்குடியின எதிர்ப்பு வரலாறும்

சோனியா காந்தியின் கருத்து, பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பின்னணியில் உள்ள மக்கள் மீதான காங்கிரஸின் நீண்டகால எதிர்ப்பை சுட்டிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.

ஒரு பழங்குடியினப் பெண், நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருப்பதை ஏற்க முடியாமல் சோனியா இப்படி பேசியதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. காங்கிரஸ் அடித்தட்டு மக்கள் உயர்வதை, உயரிய பதவிக்கு செல்வதை விரும்பாது என்பதற்கு சான்றாக சோனியா இப்படி பேசியதாகவும் பாஜகவினர் விமர்சனம் வைக்கின்றனர்.

பழங்குடியினரின் நலன்களைப் புறக்கணித்த வரலாறு, பழங்குடியின வீரர்களை அங்கீகரிக்கத் தவறியது, இந்தச் சமூகங்களுக்கான நலத்திட்டங்களை கொண்டு வராதது என்று காங்கிரஸ் மீது ஏகப்பட்ட புகார்கள் உள்ளன. அதை வெளிக்காட்டும் விதமாகவே முர்முவின் பேச்சு அமைந்து இருந்ததாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.,

முந்தைய விமர்சனம்:

ஜூலை 2024 இல், காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜனாதிபதி முர்முவை "ராஷ்டிரபத்னி" என்று குறிப்பிட்டு கடுமையாக விமர்சனம் வைத்தார். அவரது கருத்துக்கள் கட்சியின் நிலப்பிரபுத்துவ மற்றும் இனவெறி கண்ணோட்டத்தில் அமைந்து இருந்தது.. இது ஒரு பழங்குடிப் பெண் தேசத்தை வழிநடத்துவதை ஏற்க முடியாமல் காங்கிரஸ் இப்படி பேசுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.


காங்கிரஸின் எலைட் மனநிலையின் பிரதிபலிப்பு:

ஜனாதிபதி வேறு சாதி பின்னணியில் இருந்து வந்திருந்தால், காங்கிரஸ் அப்போதும் இதேபோன்ற அவமரியாதையை காட்டியிருக்குமா? என்ற கேள்வி உள்ளது. உயரடுக்கு திமிரில் காங்கிரஸ் கட்சியினர் குடியரசுத் தலைவர் முர்முவை இப்படி இகழ்வதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.

மில்லியன் கணக்கான ST குடிமக்களை அவமதிக்கும் வகையில் சோனியா காந்தியின் கருத்து அமைந்து உள்ளதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. குடியரசுத் தலைவர் அலுவலகத்தின் கண்ணியத்துக்குக் கேடு விளைவிப்பதாகக் சோனியா காந்தியின் பேச்சு இருப்பதாக பலரும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+