40 மணி நேரம் கழிவறை அனுமதி மறுத்து கை விலங்குடன் நாடு கடத்த இந்தியர்கள் தீவிரவாதிகளா? காங்கிரஸ் கோபம்
டெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக கைது செய்யப்பட்ட இந்தியர்கள், 40 மணிநேரம் கழிப்பறைக்கு செல்லக் கூட அனுமதிக்காமல் ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? என காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா எம்பி கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டது குறித்து ரன்தீப்சிங் சுர்ஜேவாலா எம்பி கூறியதாவது: அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ள விவகாரத்தில் 140 கோடி இந்தியர்களையும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அவமதித்துவிட்டது. அமெரிக்காவில் இருந்து 104 இந்தியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அதனால்தான் மத்திய அரசிடம் சில கேள்விகளை நாங்கள் முன்வைக்கிறோம்.

அமெரிக்காவில் 7.25 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக கூறப்படுகிறதே.. அவர்களை இந்தியாவுக்கு கவுரவமாக திருப்பி அழைத்துவர மத்திய அரசிடம் என்ன நடவடிக்கை இருக்கிறது? 104 இந்தியர்கள் ஏன் கைவிலங்கிடப்பட்ட நிலையில் 40 மணி நேரம் கழிவறை செல்ல கூட அனுமதிக்காமல் கொடூரமான நிலையில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறித்து ஏன் மவுனமாக இருக்கிறது மத்திய அரசு? இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரே.. அவர்களது கதி என்ன? அவர்களுக்கு இந்தியா ஏன் எந்த உதவியும் செய்யவில்லை? நாட்டிலேயே 75 ஆண்டுகளில் மிகவும் பலவீனமான ஒரு மத்திய அரசு என்றால் அது மோடி அரசுதான்.
மோடி அரசின் 2 கோடி பேருக்கான வேலை வாய்ப்பு வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதனால்தான் இந்தியர்கள் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேற நேர்ந்தது. நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 40% ஆக உள்ளது. இவ்வாறு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி கூறுகையில், நாம் அமெரிக்காவுடனான வெளியுறவு கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்பவில்லை. இந்தியர்கள் ஏன் கை விலங்குகளுடன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்? இதை நாம் ஏற்கவே முடியாது; இது அப்பட்டமான மனித உரிமை மீறல்; இது குறித்து மத்திய அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தது என கேள்வி எழுப்பினார்
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்?












Click it and Unblock the Notifications