Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹரியானாவில் EVM-யை ஹேக் செய்த பாஜக? ஆதாரத்துடன் தேர்தல் ஆணையம் போன காங்கிரஸ்.. பெரும் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவு நேற்று வெளியானது. இதில் பாஜக மீண்டும் வென்று 3வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தான் 20 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து பாஜக வெற்றி பெற்றுள்ளது எனக்கூறி அதற்கான ஆதாரங்களுடன் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் பரபரப்பான புகார் வழங்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

haryana assembly election results 2024 election commission congress

தேர்தல் ஆணையம் அறிவித்தபடி ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 5ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

நேற்றைய ஓட்டு எண்ணிக்கையில் தபால் ஓட்டில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. அப்போதும் கூட காங்கிரஸ் கட்சி 50 தொகுதிகள் வரை முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு காலை 10 மணியளவில் டிரெண்ட் என்பது மாற தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் இடங்கள் குறைந்து பாஜக வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலை வகிக்க தொடங்கினர்.

கடைசியாக நேற்றைய ஓட்டு எண்ணிக்கை முடிவில் பாஜக 48 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 37 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதன்மூலம் ஹரியானாவில் பாஜக ஹாட்ரிக் முறையில் 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. விரைவில் பாஜக தலைவர்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளனர். இதற்கிடையே தான் இந்த தோல்வியை காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தேர்தலில் பாஜக முறைகேடு செய்து வென்றுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா தலைமையில் தேர்தல் ஆணையத்தில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் ‛‛ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜகவினர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து வென்றுள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி புகாரளித்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா கூறுகையில், ‛‛ஹரியானா சட்டசபை தேர்தலில் 20 தொகுதிகளில் பாஜகவினர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்துள்ளனர். கார்னல், தாப்வாலி, ரிவாரி, பானிபட் சிட்டி, ஹேடால், கல்கா, நர்னால் உள்ளிட்ட 7 தொகுதிகளுக்கான ஆவணங்களை வழங்கி உள்ளோம். மீதமுள்ள 13 தொகுதிகளுக்கான ஆவணங்களை அடுத்த 48 மணிநேரத்தில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க உள்ளோம்.

மேலும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் விசாரணை முடியும் வரை சீல் வைத்து பாதுகாக்க கோரிக்கை வைத்துள்ளோம்'' என்றார். காங்கிரஸ் கட்சியின் இந்த புகார் தற்போது இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இருப்பினும் கூட காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை பாஜக புறம்தள்ளி உள்ளது. தேர்தலில் தோல்வியை தாங்க முடியாமல் காங்கிரஸ் கட்சி தங்கள் மீது குற்றம்சாட்டி வருவதாக பாஜக தலைவர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+