பாஜக கனவில் மண் அள்ளி போடுதே.. காஷ்மீரிலும் காங்கிரஸ், என்சி, பிடிபி சுமூக தொகுதி உடன்பாடு!
டெல்லி: "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் காங்கிரஸ் கட்சி சுமூகமான தொகுதி உடன்பாட்டை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகுமாம்.
"இந்தியா" கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தேசிய மாநாட்டு கட்சி ஆகியவற்றுடன் காங்கிரஸ் கட்சி தொகுதி உடன்பாட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் தொடக்கத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அத்துடன் இந்தியா கூட்டணியை உருவாக்கிய நிதிஷ்குமார், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தப்பி ஓடினார். உ.பி.யில் ராஷ்டிரிய லோக் தள் கட்சியும் பாஜக அணிக்கு தாவியது.

இதனால் லோக்சபா தேர்தலை "இந்தியா" கூட்டணி எதிர்கொள்ளுமா? "இந்தியா" கூட்டணி உயிர்ப்போடு இருக்குமா? என ஆரூடங்கள் கிளம்பின. இதற்கு பதிலடி தரும் வகையில் 5 மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் அதிரடியாக தொகுதி பங்கீட்டு முடிவை அறிவித்தன. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் வலிமையாக இருப்பதால் தனித்தே போட்டியிட முடிவெடுத்தன. உத்தரப்பிரதேசத்திலும் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸும் சுமூகமாக தொகுதி உடன்பாட்டை எட்டின.
தமிழ்நாட்டில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. ஆந்திராவில் இடதுசாரிகளுடன் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஷர்மிளா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கேரளாவில் இடதுசாரிகளும் காங்கிரஸிம் வலிமையான கட்சிகள் என்பதால் தனித்தே போட்டியிடுகின்றன.
இதேபோல ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியுடன் காங்கிரஸ் கட்சி நடத்திய முதல் கட்ட தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் காங்கிரஸுடன் கூட்டணியே கிடையாது என தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அறிவித்தார். ஆனாலும் காங்கிரஸ் கட்சி இடைவிடாமல் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. தற்போதைய நிலையில் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி 3, காங்கிரஸ் 2, மக்கள் ஜனநாயகக் கட்சி 1 இடத்தில் போட்டியிடுவது என உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகுமாம். பாஜக கனவில் இவ்வளவு மண்ணையா அள்ளி போடும் காங்கிரஸ்!
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications