அறுந்து விழுந்த காங்கிரஸ் கொடி.. அப்படியே உறைந்து நின்ற சோனியா காந்தி.. பரபர வீடியோ.. என்ன நடந்தது?
டெல்லி: காங்கிரஸ் கட்சி விழாவின் போது கட்சி கொடியை அதன் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஏற்றியபோது கொடி கீழே விழுந்ததால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
காங்கிரஸ் கட்சியின் 137 வது நிறுவன தின விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
அடுத்த வருடம் உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த கூட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

சோனியா காந்தி
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் 137 வது நிறுவன தின விழாவில் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கொடி ஏற்றியபோது கொடி கீழே விழுந்தது. டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.

சோனியா காந்தி காங்கிரஸ் கொடி
சோனியா காந்தி கொடியை மேலே ஏற்றிவிட்டு அதை விரிப்பதற்காக கயிற்றின் இன்னொரு முனையை இழுத்தார். அப்போது அவரால் இழுக்க முடியவில்லை என்பதால் அருகே இருந்த நிர்வாகியும் சேர்ந்து கொடியை விரிப்பதற்காக கயிறை இழுத்தார். அப்போது கொடி வேகமாக சரசரவென கீழே வந்தது.

காங்கிரஸ் கொடி வீடியோ
கீழே வந்த கொடி அப்படியே சோனியா காந்தி கைகளில் விழுந்தது. ஆனால் துரிதமாக செயல்பட்ட சோனியா காந்தி அதை தரையில் படுவதற்கு முன் அப்படியே கைகளால் பிடித்தார். இதனால் காங்கிரஸ் கட்சி கொடி தரையில் விழவில்லை.

சோனியா காந்தி காங்கிரஸ் கொடி
இது அங்கு இருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே அங்கே வந்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கொடி கம்பத்தில் ஏறி கொடியை ஏற்றினார். இதையடுத்து காங்கிரஸ் ஜிந்தாபாத் என்று கூறி அங்கு இருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கோஷம் எழுப்பினர்.
-
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications