நீங்க டெல்லியில் ஜி20 மாநாடு நடத்துங்க.. நான் ஐரோப்பாவுக்கே போய் கலக்கறேன்.. ”டூர்” போகும் ராகுல்!
டெல்லி: ஜி20 மாநாட்டுக்காக உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லிக்கு வருகை தர உள்ளனர். அதே நேரத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டாலே இந்தியாவில் அரசியல் சர்சைகள் வெடித்து கிளம்பும். அண்மையில் அமெரிக்கா சென்ற ராகுல் காந்தி, மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். இதனால் ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். வெளிநாட்டில் ராகுல் காந்தி பேசும் ஒவ்வொரு பேச்சும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு அரசியல் களத்தில் விவாதப் பொருளாகிறது.

செப்டம்பர் 9,10 ஆகிய நாட்களில் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லி வருகை தர உள்ளனர்.
டெல்லி ஜி20 மாநாட்டுக்கு முன்னதாக செப்டம்பர் 6-ந் தேதி ராகுல் காந்தி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். செப்டம்பர் 7-ந் தேதி பெல்ஜியம் நாட்டில் ஐரோப்பிய யூனியன் எம்.பிக்களை ராகுல் காந்தி சந்தித்து பேசுகிறார். மணிப்பூர் வன்முறைகளுக்கு ஐரோப்பிய யூனியன் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் ராகுல் காந்தி, ஐரோப்பிய யூனியன் எம்.பிக்களை சந்திக்க உள்ளார். ராகுல் காந்தி, ஏற்கனவே மணிப்பூருக்கு சென்று வன்முறை பாதித்த இடங்களையும் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தார். ஐரோப்பிய யூனியன் எம்.பிக்களுடனான சந்திப்பின் போது, மணிப்பூர் பயண விவரங்களை ராகுல் காந்தி பகிர்ந்து கொள்ளக் கூடும் என தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் செல்லும் ராகுல் காந்தி அங்கு தொழிலாளர்கள் இயக்கப் பிரதிநிதிகளை சந்திக்கிறார். பின்னர் நார்வே நாட்டின் ஆஸ்லோ நகருக்கும் செல்கிறார் ராகுல். ஐரோப்பிய பயணத்தின் போது செய்தியாளர்களையும் சந்தித்து உரையாடுகிறார் ராகுல் காந்தி.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications