பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக! சாப்பிட்ரோ விஷயத்தை கை கழுவிய காங்கிரஸ்
டெல்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்துக்கள் பிரிக்கப்பட்டு ஊடுருவல்காரர்களுக்கு அளிக்கப்படும் என பிரதமர் மோடி பேசியதை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து இருந்தது. இந்த நிலையில் மோடியின் பேச்சுக்கு வலு சேர்ப்பது போல காங்கிரஸ் தலைவர் ஒருவரே பேசி இருப்பதை குறிப்பிட்டு பாஜக இந்த விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவைக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்காக தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக மூத்த தலைவரான அமைச்சர் காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சு சமூக வலைதளங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடி: ராஜஸ்தானில் பேசிய பிரதமர்" 'அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா... மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டு வைக்காது." என பேசியிருந்தார்.
காங்கிரஸ் கண்டனம்: பிரதமர் மோடியின் இந்த பேச்சு அப்பட்டமான வெறுப்பு பிரச்சாரம் என எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அதே நேரத்தில் பாஜக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை எனவும் இட ஒதுக்கீடு குறித்து தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று இருந்ததை சொத்துக்களை பிரித்து அளிப்போம் என பழைய பேச்சுக்களை வைத்து பிரதமர் நரேந்திர மோடி மடைமாற்றி பேசுகிறார் என காங்கிரஸ் விமர்சித்தது. மேலும் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும் காங்கிரசின் தேசிய தலைவர் ஆன மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்திருந்தார்.
சாம் பிட்ரோடா: இந்த நிலையில் பாஜகவின் பேச்சுகளுக்கு தீனி போடுவது போல ராகுல் காந்தியின் ஆலோசகரும் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவருமான சாம் பிட்ரோடாவின் பேச்சு அமைந்திருக்கிறது. இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய சாம்,"வளர்ந்த நாடான அமெரிக்காவில் பரம்பரை சொத்து வரி விதி என்று ஒன்று அமலில் இருக்கிறது. அதில் பணக்காரர்கள் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் ஈட்டும்போது அதனை அப்படியே தங்களது வாரிசுகளுக்கு கொடுக்க முடியாது. அதில் 45 சதவீதத்தை மட்டுமே பிரித்து அளிக்க முடியும். மிச்சமிருக்கும் 55 சதவீத சொத்துக்களை அரசு எடுத்துக்கொண்டு பொதுமக்களுக்காக வைத்திருக்கும்.
சொத்து விதி: ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை இந்தியா குடிமகன்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்து அதனை தங்கள் வாரிசுகளுக்கு பிரித்துக் கொடுக்க முடியும். இதன் காரணமாகத்தான் பணக்காரர்கள் மற்றும் ஏழைகளிடையே மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது. இதை போலவே காங்கிரஸ் ஒரு புதிய திட்டத்தை கையில் வைத்துள்ளது" என கூறியிருந்தார். இந்த நிலையில் தங்கள் பேச்சுக்கு வலு சேர்ப்பது போல கிடைத்திருக்கும் இந்த பிரச்சனையை விட்டு விடக்கூடாது என பாஜக திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு இதனை ஆதாரமாக பாஜக பயன்படுத்திக் கொண்டுள்ளது.
பாஜக விளாசல்: இது தொடர்பாக அசாம் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா,"காங்கிரஸின் குடும்ப ஆலோசகர் உண்மைகளை உளறிக் கொட்டி இருக்கிறார்.. காங்கிரஸின் நோக்கம் மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை சட்டப்பூர்வமாக கொள்ளையடிப்பது என்பது இந்த பேட்டியின் மூலம் தெரிய வந்திருப்பதாக அதனை பகிர்ந்து இருக்கிறார். இதேபோல பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு தலைமை தாங்கும் அமித் மால்வியா,"இந்தியாவை அழிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இப்போது சாம் பிட்ரோடா சொத்து மறு பங்கிட்டுக்கு 50 சதவீத வாரிசு வரியை பரிந்துரை செய்துள்ளார். அதாவது நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் அதில் 50 சதவீதம் பறிக்கப்படும் நாம் செலுத்தும் வரிகளை தவிர சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் எனக் கூறியிருக்கிறார்.
விலகும் காங்கிரஸ்: இதேபோல பூனை வெளியில் வந்து விட்டது. ராகுல் காந்தியின் ஆலோசகர் அமெரிக்காவை போல சொத்து வரியை பரிந்துரைக்கிறார் என என பாஜக தலைவர்கள் காங்கிரஸை விளாசி வருகின்றனர். அதே நேரத்தில் இது தங்கள் கட்சியின் கருத்து அல்ல எனவும் சாப் பிட்ரோடாவின் கருத்துக்கும் காங்கிரஸ் கட்சியின் கருத்துக்கும் தொடர்பு இல்லை என விலகிக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இது தனது தனிப்பட்ட கருத்துதான் என சாமும் விளக்கம் அளித்திருக்கிறார்.
-
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!











Click it and Unblock the Notifications