பாஜகன்னு வந்தாலே.. நாக் அவுட்டில் ஆஸியிடம் தோற்கும் இந்தியா போல.. சுருண்ட காங்கிரஸ்.. கவனிச்சீங்களா?
டெல்லி; நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் 4 மாநில சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் வந்துள்ளன. இதில் பாஜகவுடன் நேருக்கு நேர் மோதிய இடங்களில் எல்லாம் காங்கிரஸ் படுதோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல் பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் - மே மாதம் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து தற்போது 5 மாநில தேர்தல் முடிவுகள் அதற்கு வரப்போகும் டீசர் போல பார்க்கப்படுகிறது.
மிசோரம் - நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடந்தது. மத்திய பிரதேசம் - நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடந்தது. ராஜஸ்தான் - நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடந்தது. சத்தீஸ்கர் - நவம்பர் 7 மற்றும் 17ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடந்தது. தெலுங்கானா தேர்தல் கடந்த நவம்பர் 30 தேதி நடந்தது.

தேர்தல் முடிவுகள்: தேர்தல் முடிவுகள் படி பார்த்தால் மத்திய பிரதேசத்தில் பாஜக வெற்றிபெறும் நிலையில் உள்ளது. ராஜஸ்தானில் பாஜக வெற்றிபெறும் நிலையில் உள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. சத்தீஸ்கரில் பாஜக வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.மிசோராமில் இன்று வாக்கு எண்ணிக்கை செய்யப்படவில்லை. நாளை நடக்க உள்ளது.
( மாமா ஜி.. 30 நாளில் ராகுல் கனவை காலி பண்ணிட்டாரே.. மத்திய பிரதேசத்தில் ஆட்டத்தை கலைத்ததே இவர்தான்)
பாஜக - காங்கிரஸ் நேரடி மோதல்: இதில் பாஜக - காங்கிரஸ் நேரடியாக மோதிய இடங்களில் எல்லாம் பாஜக படுதோல்வியை நோக்கி சென்றுள்ளது.
உதாரணமாக மத்திய பிரதேசத்தில்., பாஜக 164 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 64 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மெஜாரிட்டி பெற 116 இடங்கள் போதும். அங்கே சாரதான வெற்றி இல்லாமல் மாபெரும் இமாலய வெற்றியை நோக்கி பாஜக சென்று கொண்டு இருக்கிறது. இந்தியா கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் களமிறங்கியது அங்கே பாஜகவிற்கு சாதகமாக மாறியுள்ளது.
அதேபோல் ராஜஸ்தானில் பாஜக 109 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 74 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. 200 இடங்களில் மெஜாரிட்டி பெற 101 இடங்கள் போதும். சத்தீஸ்கரில் ., பாஜக 57 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 64 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மெஜாரிட்டி பெற அங்கே 90 இடங்களில் 46 இடங்கள் போதும்.
இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜகவை காங்கிரஸ் நேரடியாக எதிர்கொண்டது. பாஜக காங்கிரஸ் இடையே நேரடி ஆட்டம் நடந்தது. பாஜக - காங்கிரஸ் நேரடியாக மோதிய இடங்களில் எல்லாம் பாஜக படுதோல்வியை நோக்கி சென்றுள்ளது.

நேரடி மோதல் தோல்வி: பொதுவாக இந்திய அணி லீக் ஆட்டங்களில் கிரிக்கெட்டில் நன்றாக ஆடும். அதுவே நாக் அவுட் என்றால்.. அதுவும் ஆஸ்திரேலியா என்றால் இந்தியா தோல்வி அடையும். வரிசையாக 10 மேட்சை வென்றுவிட்டு இந்த உலகக் கோப்பையில் கூட பைகளை ஆஸ்திரேலியாவிடம் இந்தியா இழந்தது.
அப்படிதான் தெலுங்கானாவில் காங்கிரஸ் அதிரடி வெற்றியை நோக்கி சென்று உள்ளது. கேசிஆரின் பிஆர் எஸ் கட்சி அங்கே 40 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 64 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அங்கே ஆட்சி அமைக்க 119 இடங்களில் 60 இடங்கள் போதும். இப்படி தெலுங்கானாவில் அதிரடியாக ஆடிய காங்கிரஸ்.. வட மாநிலங்களில் பாஜகவிடம் மண்ணை கவ்வி உள்ளது.
பாஜக என்று வந்தால்.. அதுவும் வடமாநிலம் என்றால்.. ஆஸ்திரேலியாவை நாக் அவுட்டில் எதிர்க்கொள்ளும் இந்தியா போல காங்கிரஸ் சொதப்பி உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications