Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு.. அடுத்து 50% இட ஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கம்! காங்கிரஸ் அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இப்போது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 50% மட்டும் இட ஒதுக்கீடு என்று இருக்கும் நிலையில், அந்த உச்சவரம்பை நீக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதியை அளித்துள்ளது.

லோக்சபா தேர்தல் இன்னும் இரண்டு வாரங்களில் நடக்க உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

Lok Sabha Election Congress Manifesto says EWS will be implemented for all castes and communities

இதற்கிடையே இன்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு தொடர்பாக முக்கிய வாக்குறுதிகள் உள்ளன.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்: மத்திய பாஜக அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு புதிய வகையிலான 10 சதவிகித இட ஒதுக்கீடு ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்தச் சட்டத்தின்படி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும். ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கு கீழ் சம்பாதிப்பவர்கள் இந்த இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்த முடியும் என்ற விதி இருந்தது.

இதைப் பல தரப்பினரும் வரவேற்றாலும் இதில் இருக்கும் குறையைப் பலரும் சுட்டிக்காட்டினர். இந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான EWS இட ஒதுக்கீடு என்பது முன்னேறிய சாதியினருக்கு மட்டுமே பொருந்தும். அதாவது யாரெல்லாம் சாதி வாரியான இட ஒதுக்கீட்டைப் பெறுகிறார்களோ அவர்களைத் தவிர்த்து முன்னேறிய பிரிவினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு என்பதே விதியாகும். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்றால் அனைத்து தரப்பினருக்கும் வழங்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக இருந்தது.

"கல்விக்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி" காங்கிரஸ் வாக்குறுதி-புது கல்விக்கடன் குறித்தும் மேஜர் அறிவிப்பு


காங்கிரஸ் வாக்குறுதி: இதற்கிடையே இது குறித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதி இடம் பெற்று இருந்தது. வேலை மற்றும் கல்வியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 சதவீத EWS இட ஒதுக்கீடு அனைத்து சாதிகள் மற்றும் சமூகத்தினருக்கும் பாகுபாடின்றி செயல்படுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் அனைத்து சாதியினரும் இந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரின் இட ஒதுக்கீட்டைப் பெற முடியும்.

இதுபோக சமூக நிதி என்ற பிரிவில் காங்கிரஸ் சார்பில் வேறு சில முக்கிய வாக்குறுதிகள் உள்ளன. அது குறித்து நாம் பார்க்கலாம்.

உச்ச வரம்பு நீக்கப்படும்: காங்கிரஸ் சார்பில் நாடு முழுக்க சமூக- பொருளாதார சர்வே நடத்தும். மேலும், சாதி வாரியான கணக்கெடுப்பும் நாடு முழக்க நடத்தப்படும். அதில் கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வரம்பை உயர்த்துவதற்கான அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஓராண்டிற்குள் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான ஒதுக்கப்பட்ட அனைத்து அரசுப் பணியிடங்களும் உடனடியாக நிரப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நிரந்தர பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கும் முறை முழுமையாக ரத்து செய்யப்படும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிரந்தர பணியிடங்கள் உரிய முறையில் நிரப்பப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஓபிசி, எஸ்சி, எஸ்டி, மாணவர்களுக்கான உதவித்தொகைக்கான நிதி, குறிப்பாக உயர்கல்விக்கு இரட்டிப்பாகப்படும்.. எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் வெளிநாட்டில் படிக்கத் தேவையான உதவிகள் மேற்கொள்ளப்படும். மேலும், முனைவர் பட்டம் பெற வழங்கப்படும் உதவித்தொகை இரடிப்பாக்கப்படும் ஆகிய வாக்குறுதிகளும் அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+