இது மக்களின் தேவையை பூர்த்தி செய்யும்.. காங்.தேர்தல் அறிக்கை பற்றி ப.சி, மன்மோகன் சிங் பேச்சு!
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் அறிக்கையாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் தெரிவித்து இருக்கிறார்
டெல்லி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் அறிக்கையாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் தெரிவித்து இருக்கிறார்கள்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட 15 முக்கிய உறுப்பினர்கள் சேர்ந்து உருவாக்கி இருக்கிறார்கள்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பேசினார்கள்.

ப. சிதம்பரம் வாக்கு
ப. சிதம்பரம் தனது பேச்சில், நாம் கடந்த 5 வருடங்களில் மொத்தம். 4.70 கோடி வேலைவாய்ப்புகளை இழந்துள்ளோம். வேலைவாய்ப்பு பெரிய பிரச்சினையாகியுள்ளது. அதனால் நாங்கள் வேலைவாய்ப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்போம். நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம். லட்சக்கணக்கான மக்களின் கருத்துக்களை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

என்ன பேசினார்
வேலைவாய்ப்பின்மை, விவசாயம், தலித் மக்களின் பிரச்சனை, சிறுபான்மையினர் பிரச்சனையில் நாங்கள் அதிக கவனம் செலுத்துவோம். முக்கியமாக விவசாயிகளின் கடன் குறித்து தேர்தல் அறிக்கை முக்கிய ஒன்றாக இருக்கும். காங். தேர்தல் அறிக்கை விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யும்.

மக்கள்
இது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அறிக்கை. இந்த அறிக்கையை மக்கள்தான் முழுக்க முழுக்க தயாரித்து இருக்கிறார்கள். அதனால் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் அறிக்கையாக இந்த அறிக்கை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது, என்று குறிப்பிட்டார்.

மன்மோகன் சிங் பேச்சு
மன்மோகன் சிங் தனது பேச்சில், இதற்கு முன்பு இல்லாத அளவு பொருளாதாரத்தை உயர்த்தும் தேர்தல் அறிக்கை. அனைத்து தரப்பு மக்கள் நலனையும் உள்ளடக்கிய தேர்தல் அறிக்கை. மக்களின் பொருளாதார தேவையை மொத்தமாக பூர்த்தி செய்யும் அறிக்கையாக இது இருக்கும், என்று குறிப்பிட்டார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்











Click it and Unblock the Notifications