Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணிப்பூர் எம்பிக்களை பாஜக பேசவே அனுமதிக்கவில்லை! லோக்சபாவில் நடந்தது இதுதான்! பரபர குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மணிப்பூர் எம்பிக்களை பேச விடாமல் தடுத்ததாக காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகோய் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசின் மீது எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். அப்போது எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலரும் இந்த தீர்மானம் குறித்துப் பேசினர்.

 Congress MP Gaurav Gogoi says BJP barred Manipur MPs to speak in Parliament

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே மணிப்பூர் மாநில எம்பிக்களே நாடாளுமன்றத்தில் பேச விடாமல் தடுக்கப்பட்டதாகப் பரபர புகார் எழுந்துள்ளது.

பேச விடவில்லை: இதற்கிடையே மணிப்பூரைச் சேர்ந்த இரண்டு லோக்சபா எம்பிக்கள், அதாவது மத்திய அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங் மற்றும் நாகா மக்கள் முன்னணியின் லோர்ஹோ எஸ்.போஸ் ஆகியோர் நாடாளுமன்றத்தில் பேச விடாமல் பாஜகவால் தடுக்கப்பட்டதாகக் காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகோய் பரபர குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தங்கள் மாநிலம் குறித்து இவர்களைப் பேச விடாமல் பாஜக தடுத்ததாக காங்கிரஸ் லோக்சபா எம்பி கவுரவ் கோகோய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கவுகாத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "அசாம் எம்பியாக இருந்து என்னால் மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியும்.. ஆனால், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த எம்பிக்களால் அவர்களின் சொந்த மாநிலம் குறித்த பேச முடியாமல் போனது வேதனை அளிக்கிறது. பாஜகவினர் அந்த இரண்டு எம்பிக்களையும் பேச விடாமல் தடுத்துவிட்டனர்" என்று அவர் தெரிவித்தார்.

மணிப்பூர்: மணிப்பூர் வன்முறை தொடர்பாக மொத்தம் 17 வழக்குகளை சிபிஐ விசாரிக்கிறது. இவை மட்டுமின்றி பெண்களுக்கு எதிரான குற்றம் அல்லது பாலியல் வன்கொடுமை தொடர்பான பிற வழக்குகளையும் சிபிஐ உள்ளிட்ட மத்திய அமைப்புகள் முன்னுரிமை கொடுத்து விசாரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான இரண்டு உட்பட எட்டு வழக்குகளை சிபிஐ இதுவரை பதிவு செய்துள்ளது. மாநிலத்தின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரம் தொடர்பாக மற்றொரு வழக்கையும் சிபிஐ விசாரிக்க வாய்ப்பு இருக்கிறது.

மேலும், அங்கு மாநிலத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கப் பெண் அதிகாரிகளை சிபிஐ நியமித்துள்ளது. அறிக்கைகள் பதிவு செய்வது.. விசாரணையின் போது பாதிக்கப்பட்ட பெண்களிடம் கேள்விகளைக் கேட்பது உள்ளிட்ட பணிகளை இவர்கள் மேற்கொள்ள உள்ளனர்.

என்ன பிரச்சினை: மணிப்பூர் மாநிலம் இப்போது சமூக ரீதியாகவே இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டு இருக்கிறது. எனவே, விசாரணையின் போது குறிப்பிட்ட சமூகத்தின் இன அடிப்படையில் பாகுபாடு வந்துவிடக் கூடாது என்பதில் சிபிஐ தெளிவாக உள்ளது. விசாரணையிலும் இன பாகுபாடு வந்துவிட்டால் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரைக் குறை சொல்வதாகவே விசாரணை சென்றுவிடும் என சிபிஐ கருதுகிறது.

இதற்கிடையில், இம்பால் பள்ளத்தாக்கைச் சேர்ந்த சில அமைப்புகள் வரும் சுதந்திர தினத்தன்று பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதன் காரணமாக மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF), மக்கள் விடுதலை இராணுவம் (PLA) உள்ளிட்ட அமைப்புகளைக் கொண்ட கோர்காம் என்ற அமைப்பே இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதன் காரணமாக அங்குப் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள 5 மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டன. சில இடங்களில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டது. இதனால் அங்கு ஒரு வித பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+