'ஏழைகளை மீள முடியா கடனில் தள்ளும் ஆன்லைன் நிறுவனங்கள்..' byjusஐ மறைமுகமாக சாடும் கார்த்தி சிதம்பரம்
டெல்லி: ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் ஏழைக் குடும்பங்களை குறிவைத்து மோசமான மார்க்கெடிங் யுக்தியில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள கார்த்தி சிதம்பரம், ஆட்டோ டெபிட் மூலம் வட்டிக்கு விடுபவர்களைப் போல ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் நடந்து கொள்வதாகவும் சாடியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் குறித்துப் பேசினார்.
ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் ஏழைக் குடும்பங்களைக் குறிவைத்து, வட்டிக்கு விடுபவர்களைப் போல நடந்துகொள்வதாகவும் சாடியுள்ளார்.

கார்த்தி சிதம்பரம்
இது தொடர்பாக பேதசிய கார்த்தி சிதம்பரம், "பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு நாம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறோம். அதன் பாடத்திட்டங்கள் முழுமையாக அரசு அமைப்புகள் மூலம் சோதிக்கப்படுகின்றன. அதன் ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.

கல்விக்கான பட்ஜெட்டை விட அதிகம்
இருப்பினும், இன்றைய தினம் சில ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவை பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை. இன்னும் சொல்லப்போனால் சில நிறுவனங்களின் மதிப்பு என்பது நமது நாடு கல்விக்காக ஒதுக்கும் நிதியை காட்டிலும் அதிகம். இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் அளிக்கும் பாடத்திட்டங்களை யாரும் கண்காணிப்பதில்லை. அதில் என்ன கருத்துகள் உள்ளன, அவற்றின் தரம் என்ன உள்ளிட்டவற்றை யாரும் பரிசோதிப்பது இல்லை. அதேபோல அந்த பாடத்திட்டங்களைக் கற்றுக்கொடுப்பவர்களின் தகுதிகள் என்ன என்பது கூட யாருக்கும் தெரிவதில்லை.

மோசமான மார்கெட்டிங் யுக்தி
இவை மிக மோசமான மார்கெட்டிங் யுக்தியில் களமிறங்குகின்றன. அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் இவர்கள் குறி வைக்கிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி முறையை அளிக்க வேண்டும் என்று விரும்பும் ஏழை பெற்றோரைக் குறி வைக்கும் இவர்கள், அவர்களை இதுபோன்ற கோர்ஸ்களை வாங்க வைக்கிறார்கள். மேலும், ஒரு முறை கோர்ஸ்களை சேர்ந்த பின்னர், ஆட்டோ டெபிட் மூலம் இவர்களைத் தொடர்ந்து அந்த பிடியிலேயே வைத்துள்ளனர். அதில் இருந்து வெளியே வர முயன்றாலும் விடுவதில்லை. இதில் சில நிறுவனங்கள் வட்டிக்கு விடுபவர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்.

சர்வதேச நிறுவனங்கள்
சர்வதேச நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள இதுபோன்ற நிறுவனங்களைக் கண்காணிக்க கல்வித்துறை அமைச்சகம் குறைந்தபட்ச நடவடிக்கைகளையாவது எடுக்க வேண்டும். நாட்டிலுள்ள பல சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே இது குறித்து புகார் எழுப்பியுள்ளனர். ஆனால், இந்த பெருநிறுவனங்கள் இதுபோன்ற புகார்களை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடுகின்றன.
Recommended Video

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர்
இந்த நிறுவனம் தற்போது இந்திய கிரிக்கெட் அணியைக் கூட ஸ்பான்சர் செய்கிறது. நான் எந்த நிறுவனத்தைச் சொல்கிறேன் என அனைவருக்கும் தெரியும். அந்த நிறுவனத்தின் பதிப்பு மட்டும் 21 மில்லியன் டாலர். இது இந்தியாவில் கல்விக்காக ஒதுக்கப்படும் ஒட்டுமொத்த பட்ஜெட்டை காட்டிலும் அதிகம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
#KartiChidambaram raises an important issue relating to the unregulated, online #education companies and their #predatory lending practices. One such company sponsored the #Indian #cricket team. The market worth of these companies far exceed the Indian #educationbudget! pic.twitter.com/vhTYDE2WZY
— RadhakrishnanRK (@RKRadhakrishn) December 14, 2021
யாரை சொல்கிறார்
கார்த்தி சிதம்பரம் byjus என்ற ஆன்லைன் கல்வி நிறுவனத்தைக் குறித்து வைத்துத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். முன்னதாக, கடந்த சில வாரங்களுக்கு முன் அவர் தனது ட்விட்டரில், "டியூஷன் வகுப்புகள் இப்போது மிரட்டி பணம் பறிக்கும் தொழில். பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பங்களைக் குறிவைத்து, சூழ்ச்சி மார்க்கெட்டிங் மூலம் அவர்களைக் கடன் சுழற்சியில் தள்ளுகிறார்கள். கல்வியை மிரட்டி பணம் பறிக்கும் தொழிலாக மாறிவிடக் கூடாது" எனப் பதிவிட்டுள்ளார். மேலும், இதைத் தடுக்க அரசு உரியச் சட்டங்களைக் கொண்டு வர வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications