பிரச்னையை சரி செய்ய தெரியாத கார் மெக்கானிக்... நிர்மலா சீதாராமனை விமர்சிக்கும் சசி தரூர்
டெல்லி: திறமை இல்லாத கார் மெக்கானிக் எப்படி பிரச்னைகளை சரி செய்ய தெரியாமல் இருப்பாரோ, அதேபோல பாஜக அரசு செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் ட்வீட் செய்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். கொரோனா பரவல் காரணமாக இந்தப் பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.

கொரோனா பரவலுக்குப் பின் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் என்பதால் இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. 2021-2022 நிதியாண்டில் சுகாதாரத் துறைக்கு 2.23 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவித்தார். இதேபோல பல முக்கிய அறிவிப்புகளையும் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நிர்மலா சீதாராமனை திறமையில்லாத கார் மெக்கானிக்குடன் ஒப்பிட்டு காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "திறமையில்லாத கார் மெக்கானிக் ஒருவர் தனது வாடிக்கையாளரிடம், உங்கள் கார் பிரேக்கை என்னால் சரி செய்ய முடியவில்லை. இதனால், காரின் ஹாரன் சத்தத்தை அதிகப்படுத்தியுள்ளேன் என கூறுவதை இந்த பாஜக அரசு நினைவூட்டுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
அதாவது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகளுக்குப் பதிலாக வெறும் பெரிய அறிவிப்புகளை மட்டுமே பாஜக அரசு வெளியிட்டு வருவதாக சசி தரூர் கிண்டல் செய்துள்ளார். இவரைப் போலவே காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி. ப. சிதம்பரம், திமுகவின் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் மத்திய பட்ஜெட்டை விமர்சித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications