காங்கிரஸ்+திமுக.. அந்தமான் நிகோபாரில் பாஜகவை அடித்து நொறுக்கிய கூட்டணி! பெரிய வெற்றி!
ஸ்ரீ விஜய புரம்: அந்தமான் நிகோபார் தீவுகளின் போர்ட் பிளையர் நகராட்சி மன்றத் தேர்தலில் (PBMC), பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் மற்றும் திமுக இணைந்து 13 இடங்களைப் பிடித்து, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளன. இதன் மூலம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு போர்ட் பிளையர் நகராட்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மேயராகப் பொறுப்பேற்றுள்ளார்.

- காங்கிரஸ் (INC): 12 இடங்கள்
- திமுக (DMK): 1 இடம்
- பாஜக (BJP): 9 இடங்கள்
- தெலுங்கு தேசம் (TDP): 2 இடங்கள்
புதிய மேயர்
காங்கிரஸ் கட்சியின் வசந்தா முத்துராமன், போர்ட் பிளையர் நகராட்சியின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தலைநகர் பகுதியில் பாஜகவின் ஆதிக்கத்தை முறியடித்து காங்கிரஸ் மேயர் பதவியைக் கைப்பற்றியது அக்கட்சிக்கு ஒரு முக்கிய அரசியல் வெற்றியாகக் கருதப்படுகிறது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தவும் அந்தமான் தீவுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அந்தமான் சென்ற ராகுல் காந்தி, வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தனது பயணத்தின் அடுத்த கட்டமாக, நாளை அவர் நிகோபர் தீவுகளுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். அங்குள்ள பழங்குடியின கவுன்சில் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச உள்ளார்.
அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் நிலவும் உள்ளூர் பிரச்சனைகள் மற்றும் பழங்குடியினரின் உரிமைகள் குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், இந்த வெற்றி மற்றும் அவரது வருகை அந்தப் பிராந்தியத்தில் காங்கிரஸின் செல்வாக்கை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications