காங்கிரஸ் கட்சி புதிய தலைவர் இன்று இரவு அறிவிப்பு.. தேர்வு நடைமுறையில் சோனியா, ராகுல் பங்கேற்கவில்லை
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார் என்பது குறித்து இன்று இரவு அக்கட்சியின் காரிய கமிட்டிக்கு பிறகு அறிவிக்கப்படுகிறது. அதே சமயம் தலைவரை தேர்வு செய்யும் நடைமுறையில் சோனியாவும் , ராகுலும் பங்கேற்கவில்லை.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராஜீவ் காந்திக்கு பின்னர் சோனியா அப்பதவியை வகித்து வந்தார். இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாகவும் கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதற்காகவும் ராகுல்காந்தி தலைவராக கொண்டு வர அவர் விரும்பினார்.

அதன்படி கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ராகுல் தலைவர் பதவியை வகித்து வந்தார். இதைத் தொடர்ந்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில தேர்தல்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் மோடியை எதிர்த்து ராகுல் நிச்சயம் வெற்றி பேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படுதோல்வியை சந்தித்தார். இதையடுத்து கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். எனினும் அவரது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கட்சியினர் விரும்பினர்.
Delhi: Congress Working Committee (CWC) meeting underway at party office. pic.twitter.com/2RbzDziJXo
— ANI (@ANI) August 10, 2019
எனினும் விடாப்பிடியாக அவர் ராஜினாமா செய்தார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தை சேராதவரை தலைவராக கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அடுத்த தலைவர் யார் என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி ஆலோசனை நடத்தி வந்தது.
டெல்லியில் உள்ள சோனியா இல்லத்தில் மூத்த நிர்வாகிகள் ஏகே அந்தோணி, அகமது படேல், கேவி வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்ய தாமதம் நிலவக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கி முடிவடைந்தது. இதில் சோனியா, ராகுல்காந்தி, மீரா குமார், ஹரீஷ் ராவத், அகமது படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து தலைவரை தேர்வு செய்யும் நடைமுறை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஏற்கெனவே தலைவர்களாக இருந்தவர்கள் என்பதால் புதிய தலைவரை தேர்வு செய்யும் நடைமுறையில் தாங்கள் பங்கேற்க மாட்டோம் என சோனியாவும், ராகுலும் தெரிவித்துவிட்டனர். இதனால் அவர்கள் பங்கேற்கவில்லை. இன்று இரவு மீண்டும் 8 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் மீண்டும் கூடுகிறது. இதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications