தொடர்ந்து ஆப்சென்ட்.. லோக்சபாவில் ராகுல்காந்தி வருகை எவ்வளவு தெரியுமா? வெளியான அட்டன்டென்ஸ்
டெல்லி: நாடாளுமன்றத்தின் 17வது அமர்வில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான ராகுல்காந்தியின் வருகைப் பதிவு தேசிய சாரசரியை விட குறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரத் ஜடோ யாத்திரை காரணமாக குளிர்கால கூட்டத் தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் இயற்றப்படும் சட்டங்களை ஆய்வு செய்யும் பி.ஆர்.எஸ் சட்ட ஆராய்ச்சி நிறுவனம் இந்த தகவல்களை வெளியிட்டிருக்கிறது. மக்களவையின் 17வது அமர்வில் ராகுல்காந்தியின் வருகைகளை ஆய்வு செய்ததில் இந்த விவரங்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்படி ராகுல்காந்தியின் வருகையானது மற்ற எம்பிக்களின் தேசிய வருகையை விட 79% குறைவாக இருபதாக கூறியுள்ளது. இவரை போலவே கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற எம்பிக்களின் வருகை 84 சதவிகிதமாக இருக்கிறது என்றும், மொத்தமாக ராகுல்காந்தி இந்த 17வது அமர்வில் 5 விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார் எனவும் பி.ஆர்.எஸ் சட்ட ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் கடைசியாக நடந்த குளிர்கால கூட்டத் தொடரில் அவர் பங்கேற்கவில்லை.

பாரத் ஜடோ யாத்திரை
இதற்கு அவர் மேற்கொண்டிருந்த பாரத் ஜடோ யாத்திரைதான் காரணம். கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி இந்த யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கினார். இது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கான என ராஜஸ்தான் மாநிலத்தில் 100வது நாளை எட்டியது. அதேபோல இந்த யாத்திரைக்கு மக்கள் வரவேற்பும் அதிக அளவில் இருந்தது. எதிர் வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியின் வாக்கு வங்கியை உயர்த்த வேண்டும் என்றும், பாஜகவுக்கு எதிராக அரசியல் கட்சிகளை ஒன்று சேர்க்கவும் இப்பணயத்தை தொடங்கினார். இதனால் கடந்த டிசம்பர் 7ம் தேதி தொடங்கி 56 நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்கவில்லை.

வருகை பதிவு
ஆக இதுவரை ராகுல் காந்தி மொத்ததமாக 17வது அமர்வில் மொத்தம் 86 கேள்விகளை கேட்டிருக்கிறார். இதற்கு முந்தைய இரண்டு மக்களவை அமர்வில் எந்த கேள்விகளையும் அவர் கேட்கவில்லை என்று பி.ஆர்.எஸ் சட்ட ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. 16வது மக்களவை அமர்வில் ராகுல்காந்தியின் வருகையானது இதேபோல குறைவாக இருந்துள்ளது. அப்போது அவர் உத்தரப் பிரதேசத்தின் அமேதி தோகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அப்போதும் கூட மொத்த எம்பிக்களின் தேசிய வருகை சராசரியானது 80 சதவிகிகதமாக இருந்தது. ஆனால் ராகுலின் வருகை 52 சதவிகிதமாக இருந்தது.

அமேதி தொகுதி சார்பாக
16வது அமர்வை பொறுத்த அளவில் அவர் 14 விவாதங்களில் பங்கேற்றார். ஆனால் எந்த கேள்விகளையும் எதிரக்கட்சியினரை பார்த்து எழுப்பவில்லை. இதற்கு முன்னர் 15வது மக்களவை அமர்விலும் அமேதி தொகுதி சார்பில் பங்கேற்றிருந்தார். இந்த ஐந்து ஆண்டுகளில் அதாவது 2009-2014ம் ஆண்டுகளில் அவருடைய நாடாளுமன்ற வருகையானது 43 சதவிகிதமாகும். உத்தரப் பிரதேச மாநில ஒட்டு மொத்த எம்பிக்களின் வருகை சாரசரியாது 79 சதவிகிமாக இருந்த நிலையில் இவருடைய வருகை மட்டும் குறைந்து இருந்துள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளிலும் எந்த கேள்வியையும் இவர் எழுப்பவில்லை.

17வது அமர்வு
தொடர் விடுப்பு காரணமாக பாஜக காங்கிரஸை கடுமையாக சாடியது. ராகுல் காந்தியின் வருகை குறித்து பாஜக தலைவர்களுள் ஒருவரான பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், "காங்கிரஸை நாட்டு மக்கள் ஏற்கெனவே நீண்ட விடுப்பில் அனுப்பிவிட்டனர்" என்று விமர்சித்திருந்தார். தற்போது நடைபெற்று வரும் 17வது மக்களவை அமர்வை பொறுத்த அளவில், இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் விரைவாகவே முடிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னரும் 7 முறை இவ்வாறு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாக சீக்கிரமாக முடிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications