காங்கிரஸுக்கு புது பிளட் கன்ஃபார்ம்? தலைவர் தேர்தலில் முதல் வாக்கை பதிவு செய்த ப.சிதம்பரம்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் தேர்தலில் வாக்குப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் முதல் வாக்கைப் பதிவு செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் கட்சிக்கு 24 ஆண்டுகளுக்குப் பின்னர் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் தலைவராக உள்ளார். இத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது.
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகம் மற்றும் டெல்லி காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் ஆகிய இடங்களில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் நாடு முழுவதும் சுமார் 9,000 காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களிக்கின்றனர். கர்நாடகா மாநிலத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வரும் பகுதியில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல் நபராக வாக்களித்தார். அவரைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்கள் வாக்களித்தனர். இத்தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், இன்று காலையில் என்னை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் சசி தரூர் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அவர் வெற்றி பெற நானும் வாழ்த்து தெரிவித்தேன் என்றார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ப.சிதம்பரத்தைத் தொடர்ந்து வாக்களித்த மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். அரசியல் கட்சிகளிலேயே தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துகிற ஒரே ஒரு கட்சி காங்கிரஸ் மட்டும்தான் என்றார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வாக்களித்த அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டிகே சிவகுமார், கர்நாடகாவில் இன்று மொத்தம் 490 பேர் வாக்களிக்கின்றனர். இது ஒருவரலாற்று சிறப்புமிக்க தருணம். காங்கிரஸ் தலைவர் தேர்தல் வெளிப்படையாக நடைபெறுகிறது. இதுதான் நாட்டுக்கும் நல்லது என்றார்.

இத்தேர்தலில் வாக்களித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், 22 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. கட்சிக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இத்தேர்தல் இருக்கும். காங்கிரஸ் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அக்டோபர் 19-ந் தேதிக்குப் பின்னரும் சோனியா காந்தி குடும்பத்துடனான நல்லுறவு தொடரும் என்றார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications