காங்கிரஸ் கட்சியின் லேட்டஸ்ட் வேட்பாளர் பட்டியல்.. அமேதி, ரேபரேலிக்கு நீடிக்கும் சஸ்பென்ஸ்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் பல்வேறு கட்டங்களாக வெளியாகிறது. அந்த வகையில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் லிஸ்ட் இன்று வெளியானது. வேட்பு மனு நிறைவடைய 3 நாட்களே உள்ள நிலையில், அமேதி, ரேபரேலிக்கும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
18-வது லோக்சபா நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26-ல் முதல் 2 கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. ஜூன் 1ஆம் தேதி வரை எஞ்சிய 5 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. மே 20 ஆம் தேதி 5-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. உத்தர பிரதேசத்தில் நேரு குடும்பத்தின் பாரம்பரிய வாக்கு வங்கியை கொண்ட அமேதி, ரேபரேலி தொகுதிகளில் மே 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

தற்போது வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய மே 3 ஆம் தேதிதான் கடைசி நாள். வேட்பு மனு நிறைவு பெற இன்னும் மூன்று நாட்களே உள்ளது. ஆனால் இதுவரையிலும் அமேதி, ரேபரேலி லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் இன்னமும் அறிவிக்கவில்லை.
வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, அமேதியிலும் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் ராகுல் காந்திக்கு பதில் அவரது மைத்துனரும் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா போட்டியிடக் கூடும் எனவும் கூறப்படுகிறது. ரேபரேலியில் போட்டியிட்ட சோனியா காந்தி தற்போது ராஜ்யசபா எம்பியாகிவிட்டார்.
எனவே அத்தொகுதியில் பிரியங்கா காந்தி களம் காணக் கூடும் எனவும் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை காங்கிரஸ் கட்சி மேலிடம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இன்று கூட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானது. நான்கு தொகுதிகளுக்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் லிஸ்ட் இன்று வெளியானது. ஆனால் இதிலும் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
நடிகரும் அரசியல்வாதியுமான ராஜ்பப்பர் குர்கான் தொகுதியில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் ஷர்மா கங்கரா தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ சத்பால் ரைஸ்வடா இமாசல பிரதேசத்தின் ஹமிர்புர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் போட்டியிடுகிறார். அனுராக் தாகூர் இந்த தொகுதியில் நான்கு முறை தொடர்ந்து வென்றுள்ளார். இந்த தொகுதியில் அனுராக் தாகூரின் குடும்பத்தினருக்கு செல்வாக்கு உள்ள தொகுதியாக உள்ளது. அவரது தந்தையும் முன்னாள் முதல்வருமான பிரேம் குமார் துமால் வெற்றி வெற்றி பெற்றிருக்கிறார்.
இன்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியானதும் அதில் அமேதி, ரேபரலி தொகுதி வேட்பாளர்கள் பெயரும் இருக்கும் என்று கட்சியினர் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், இன்றும் அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால், அமேதி, ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட போவது யார் என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications