டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மசூதிகளில் ஸ்பீக்கர்: இவங்களை எல்லாம் மீட்டிங் நடத்த அனுமதிக்காதீங்க.. காங். தலைவர் அதிரடி கோரிக்கை

மசூதிகளில் ஒலிபெருக்கி சத்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் கருத்து கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

டெல்லி: சமூக பிரச்சினையை ஏற்படுத்தும் தலைவர்களின் பொதுக்கூட்டங்களுக்கு மாநில அரசு அனுமதி வழங்க கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நானா படோலே காட்டமாக தெரிவித்துள்ளார்.

ஹிஜாப் விவகாரம், ஹலால் இறைச்சி விவகாரத்தை தொடர்ந்து, மசூதிகளில் ஒலிபெருக்கி விவகாரமும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.. குறிப்பாக பெங்களூருவில் ஒலிபெருக்கி விவகாரம் பெரிதாக பேசப்பட்டது.

எனவே, மசூதிகள், கோவில்கள், பிற பகுதிகளில் ஒலி பெருக்கிகள் பயன்பாடு குறித்து கர்நாடக ஹைகோர்ட்டு ஏற்கனவே ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது.

மசூதிகளில் தடை? மைக்ல பெட்ரோல் விலைய பேசுங்க! பாஜக, சித்தப்பாவுக்கு பதிலடி கொடுத்த ஆதித்ய தாக்கரே! மசூதிகளில் தடை? மைக்ல பெட்ரோல் விலைய பேசுங்க! பாஜக, சித்தப்பாவுக்கு பதிலடி கொடுத்த ஆதித்ய தாக்கரே!

 கர்நாடக ஹைகோர்ட்

கர்நாடக ஹைகோர்ட்

அதாவது எந்தெந்த இடங்களில் எவ்வளவு ஒலியை பயன்படுத்த வேண்டும் என்றும், ஒலியை அளவிடும் டெசிபல் மீட்டரை பொருத்த வேண்டும் என்றும் கோர்ட்டு தன்னுடைய உத்தரவில் தெரிவித்திருந்தது.. இதையடுத்து, கடந்த 6 மாதங்களாக கர்நாடக ஹைகோர்ட்டு உத்தரவை பின்பற்றாத மசூதிகள், கோவில்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளதாகவும், கோர்ட்டு உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில காவல்துறையும் கூறிருந்தது.

மசூதிகள்

மசூதிகள்

மேலும், ஒலிபெருக்கிகளை அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவிற்குள் பயன்படுத்துமாறு மசூதிகள், கோயில்கள், தேவாலயங்கள் உட்பட 301 நிறுவனங்களுக்கு, பெங்களூரு போலீஸ் தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எனினும் அரசியல் கட்சி தலைவர்கள் இதனை ஒரு விவகாரமாக எடுத்து கொள்ளக்கூடாது என்றும், பாகுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.

 ராஜ் தாக்கரே

ராஜ் தாக்கரே

எனினும், இது தொடர்பான சர்ச்சை பேச்சுகள், பேட்டிகள் வெடித்து கொண்டுதான் இருக்கின்றன.. குறிப்பாக, கடந்த 2-ம்தேதி நடந்த குடிபட்வா பொது கூட்டத்தில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பேசும்போது, மசூதிகளில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்றார்.. அதுமட்டுமல்ல, இதேபோல மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை அகற்றவில்லையெனில், அதன் அருகே நவநிர்மாண் சேனாவினர் ஒலிப்பெருக்கியில் அனுமன் பாடல்களை ஒலிப்பார்கள் என்றும் அறிவித்திருந்தார்..

 நானா படோலா

நானா படோலா

இதையடுத்து சில நவநிர்மாண் சேனாவினர் பொது இடங்களில் ஒலிப்பெருக்கி மூலம் அனுமன் பாடல்களை ஒலிக்க செய்த சம்பவங்களும் அடுத்தடுத்து அரங்கேறின.. இந்தநிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே இது தொடர்பான தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.. அதில், "சமூக பிரச்சினைகளை ஏற்படுத்தி விலைவாசி உயர்வு போன்ற மக்களை பாதிக்கும் பிரச்சினைகள் ஓரங்கட்டப்படுகின்றன. எந்த மதத்தை பின்பற்றவும் எல்லோருக்கும் உாிமையை அரசியல் சாசனம் வழங்கி உள்ளது.

அனுமதி

அனுமதி

சமூக பிரச்சினையை ஏற்படுத்தும் தலைவர்களின் பொதுக்கூட்டங்களுக்கு மாநில அரசு அனுமதி வழங்க கூடாது. நான் ஒரு இந்து... தினந்தோறும் அனுமன் கீதம் பாடுகிறேன்... அதற்காக எனது மதத்தை விளம்பரப்படுத்த தேவையில்லை... பிரார்த்தனை செய்ய யாருடைய அனுமதியும் தேவையில்லை... மற்ற மதத்தை விமர்சிப்பவர்கள் அரசியல் அமைப்பில் நம்பிக்கை இல்லாதவர்கள்" என்று காட்டமாக கூறியுள்ளார்.

English summary
congress senior leader Nana Patole not allowed Meetings leaders create social
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X