கர்நாடகாவின் சி.டி.ரவி நீக்கம்.. காங்கிரஸ் மூத்த தலைவரின் மகனுக்கு பாஜக தேசிய பொதுச் செயலாளர் பதவி
டெல்லி: பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் பதவியில் தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவியை நீக்கிவிட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரின் மகனுக்கு தேசிய பாஜக அப்பதவியை கொடுத்துள்ளது.
மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறுகிறது. கால அளவில் சொல்ல வேண்டுமானால் இன்னும் 8 மாதங்கள்தான் இருக்கின்றன. தற்போது பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தை நோக்கி பயணிக்கிறது. அதிமுகவும் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறது.

அது போல் திமுகவும் ராமநாதபுரத்தில் பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறது. எனவே தமிழகத்தில் பல கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாஜக 3ஆவது முறையாக ஆட்சியை பிடிக்க போராடி வருகிறது. எதிர்க்கட்சிகளோ "இந்தியா" என்ற கூட்டணியை ஏற்படுத்தி பாஜக அரசு வெல்லாதவாறு வியூகம் வகுத்து வருகிறது.
கடந்த முறை பெரும்பாலான மாநிலங்களில் உள்ள லோக்சபா தொகுதிகளில் பாஜகவே வென்றது. ஆனால் இந்த முறை எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மெகா கூட்டணியால் அந்த வெற்றி வாய்ப்பு என்பது கடினமாக இருக்கும் என தெரிகிறது. வடமாநிலங்களில் மட்டுமே சோபித்து வந்த பாஜக தற்போது தென் மாநிலங்களில் கால் ஊன்ற துடித்து வருகிறது.
வரும் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு பாஜக பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் புதிய தேசிய துணைத் தலைவர்கள், தேசிய பொதுச் செயலாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த கட்சியில் தேசிய பொதுச் செயலாளர் சி.டி ரவி அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவர் கர்நாடகா மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சி.டி.ரவி கர்நாடகா தேர்தலில் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் தோல்வியை தழுவினார். அவரை அங்கீகரிக்க அவருக்கு இந்த முக்கிய பதவி கொடுக்கப்படலாம் என தெரிகிறது. இவர் தமிழக தேர்தல் பொறுப்பாளராக உள்ள நிலையில் அந்த பதவியில் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் தேசிய பொதுச் செயலாளர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணியை பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியிமித்துள்ளார். அது போல் தெலுங்கானா முன்னாள் பாஜக தலைவரான பண்டி சஞ்சய் குமார் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம்












Click it and Unblock the Notifications