உ.பியில் 80 இடங்களிலும் காங். தனித்து போட்டி.. ராகுல் காந்தி அறிவிப்பு!
டெல்லி: உத்தர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார்.
இந்த லோக் சபா தேர்தலில் உத்தர பிரதேசம் மிக முக்கியமான தொகுதியாக உருவெடுத்து இருக்கிறது. அங்கு இருக்கும் 80 தொகுதிகளில் அதிக இடங்களை வெல்லும் கட்சியே எப்போதும் ஆட்சி அமைப்பது வழக்கம்.
இந்த நிலையில் அங்கு பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி உறுதியாகி உள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதும் உறுதியாகி இருக்கிறது.

மாநில கூட்டணி
உத்தர பிரதேச கூட்டணி ஒப்பந்தத்தின்படி பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி ஆகிய கட்சிகள் சரியாக 38 தொகுதிகளில் போட்டியிடும். 80 தொகுதியில் 2 தொகுதிகளை சிறிய கட்சிகளுக்கு அளிக்க உள்ளது. மீதம் இருக்கும் இரண்டு ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளை மரியாதை காரணமாக (காங்கிரஸ் கட்சி சார்பாக நேரு குடும்பத்தினர் போட்டியிடும் இடம்) போட்டியிடாமல் விட இந்த கூட்டணி முடிவெடுத்துள்ளது.

ராகுல் கருத்து
இந்த நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார். அதில், காங்கிரஸ் கட்சிக்கும் உத்தர பிரதேசத்தில் உள்ள மாநில கட்சிகளுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. மாயாவதி மீதோ, நண்பர் அகிலேஷ் யாதவ் மீதோ காங்கிரஸ் கட்சிக்கு எந்த வருத்தமும், கோபமும் இல்லை. எங்களுக்கு இடையில் நல்ல நட்பு இருக்கிறது. நாங்கள் எப்போதும் போல நல்ல உறவில் இருக்கிறோம்.

கோபம் இல்லை
எங்களுடைய ஒரே குறிக்கோள் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே. நான் மாயாவதி, அகிலேஷ் இருவரையும் மிகவும் மதிக்கிறேன். அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில், அவர்களுக்கு உதவ நாங்கள் தயார். அவர்கள் எப்போது உதவி கேட்டாலும் செய்ய நானும் காங்கிரஸ் கட்சியும் தயாராகி இருக்கிறோம்.

தனித்து போட்டி
பாஜகவை வீழ்த்துவது மட்டுமே ஒரே குறி. இரண்டு மாநில கட்சிகளும் கூட்டணி வைத்ததில் எங்களுக்கு வருத்தம் கிடையாது. நாங்கள் காங்கிரஸ் கட்சியின் கொள்கையையும் காப்பாற்ற வேண்டும். உத்தர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும். தேர்தலை தனியாக சந்திக்க பாஜக தயார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications