டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்கள் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி.. காங்.க்கு விரைவில் புதிய தலைவர்.. குலாம் நபி ஆசாத் பளீர்

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது எங்கள் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி, இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவர் கிடைக்க போகிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இன்னும் 6 மாதங்களுக்கு நீடிப்பார் என்று கடந்த திங்கள் கிழமை நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்பின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது.

காங்கிரஸ் தலைமைக்கு எதிராக குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட 23 தலைவர்கள் கடிதம் எழுதிய நிலையில் இந்த காரிய கமிட்டி கூட்டம் நடந்தது. தற்போது இந்த காரிய கமிட்டி கூட்டம் எடுத்த முடிவு குறித்து குலாம் நபி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார்.

 எல்லாமே சீக்ரெட்.. சோனியா, ராகுலின் எல்லாமே சீக்ரெட்.. சோனியா, ராகுலின் "ரேடாரில்" சிக்காத 23 தலைவர்கள்..திடீரென ஒன்று சேர்ந்தது எப்படி?

காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சி

குலாம் நபி ஆசாத் தனது கருத்தில், காங்கிரஸ் கட்சிக்குள் தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது எங்கள் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி. இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவர் கிடைக்க போகிறார். கட்சிக்குள் நடக்கும் தேர்தல் மூலம் இன்னும் 6 மாதத்தில் புதிய தலைவர் இருக்கிறார். நாங்கள் கடிதத்தில் வைத்த கோரிக்கை இதன் மூலம் வெற்றி கிடைத்துள்ளது .

கோரிக்கை என்ன

கோரிக்கை என்ன

எங்களின் கோரிக்கையை மாநில நிர்வாகிகள், தலைவர்கள் வரவேற்று இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியான மாற்றம் கொண்டு வர நினைக்கும் யாரும் இந்த கட்சி தேர்தலில் போட்டியிடலாம். மாநில, மாவட்ட தலைவர்களுக்கும் தேர்தல் வைக்க வேண்டும் . தலைமை பொறுப்பில் ஐயூர்க்கும் எல்லோரும் கட்சிக்குள் முறையாக தேர்வு செய்யப்பட வேண்டும்.

காரிய கமிட்டி

காரிய கமிட்டி

காங்கிரஸ் காரிய கமிட்டியில் இருக்கும் நபர்களும் முறையாக தேர்தல் வைத்து தேர்வு செய்யப்பட வேண்டும். சிலர் தேர்தலில் நிற்காமல் நேரடியாக பொறுப்புகளை பெற நினைக்கிறார்கள். அவர்கள் மட்டுமே எங்களின் இந்த கோரிக்கையை ஏற்கிறார்கள். மற்ற எல்லோரும் எங்கள் கோரிக்கையை ஏற்று உள்ளனர். காங்கிரஸ் கட்சியை வலிமையாக்குவதே எங்களின் நோக்கமும்.

பதவி காலம்

பதவி காலம்

கட்சியில் அனைத்து தலைவர் பதவிக்கு குறிப்பிட்ட பதவி காலத்தை தேர்வு செய்ய வேண்டும். காங்கிரஸ் காரிய கமிட்டிக்கும் பதவி காலத்தை தேர்வு செய்ய வேண்டும். இதற்கான தேர்தலை இப்போது நடத்த தேவையில்லை. புதிய தலைவர்கள் பதவி ஏற்று அதன்பின் தேர்தல்களை நடத்த வேண்டும். அப்போதுதான் அதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.

சோனியா காந்தி

சோனியா காந்தி

சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் இந்த முடிவை ஆதரித்துள்ளனர். அவர்கள் இருவரும் இன்னும் ஒரு மாதத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறினார்கள். ஆனால நாங்கள் அது கஷ்டம் என்று கூறிவிட்டோம். அதனால் இன்னும் ஆறு மாதத்தில் முழுமையாக செயல்பட கூடிய சக்தி படைத்த ஒரு தலைவர் கட்சிக்குள் தேர்வு செய்யப்படுவார் என்று நம்புகிறோம், என்று குலாம் நபி அசாத் தெரிவித்துள்ளார்.

English summary
Congress will have a news leader in 6 months, victory for us says Ghulam Nabi Azad on CWC decision.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X